Simon, Son of Jonah
When the Angel of the Lord called Joseph as son of David, we all know that Angel of the Lord is referring King David who lived around 850 years before - Now the birth of Jesus Christ was as follows: After His mother Mary was betrothed to Joseph, before they came together, she was found with child of the Holy Spirit. Then Joseph her husband, being a just man, and not wanting to make her a public example, was minded to put her away secretly. But while he thought about these things, behold, an angel of the Lord appeared to him in a dream, saying, Joseph, son of David, do not be afraid to take to you Mary your wife, for that which is conceived in her is of the Holy Spirit - Matthew 1:18-20
And now Jesus is calling Simon Peter as son of Jonah in 3 different situations - When Jesus came into the region of Caesarea Philippi, He asked His disciples, saying, Who do men say that I, the Son of Man, am? So they said, Some say John the Baptist, some Elijah, and others Jeremiah or one of the prophets. He said to them, But who do you say that I am? Simon Peter answered and said, You are the Christ, the Son of the living God. Jesus answered and said to him, Blessed are you, Simon Bar-Jonah, for flesh and blood has not revealed this to you, but My Father who is in heaven - Matthew 16:13-17, John 1:42, John 21:15, John 21:16, John 21:17
Who is Jonah here? - there was a great prophet named Jonah who lived around 500 years before in the same region, And this Jonah suffered lot while carrying the Lord's message to the Gentiles.
And also Bible tells that Prophet Jonah lived between Nazareth and Capernaum - In the fifteenth year of Amaziah the son of Joash, king of Judah, Jeroboam the son of Joash, king of Israel, began to reign in Samaria, and he reigned forty-one years. And he did what was evil in the sight of the Lord. He did not depart from all the sins of Jeroboam the son of Nebat, which he made Israel to sin. He restored the border of Israel from Lebo-hamath as far as the Sea of the Arabah, according to the word of the Lord, the God of Israel, which he spoke by his servant Jonah the son of Amittai, the prophet, who was from Gath-hepher. For the Lord saw that the affliction of Israel was very bitter, for there was none left, bond or free, and there was none to help Israel. But the Lord had not said that he would blot out the name of Israel from under heaven, so he saved them by the hand of Jeroboam the son of Joash - 2 Kings 14:23-27
If God could remember Jonah, and chase his generation even after 500 years, Definitely your sacrifice for Jesus Christ will not go vain.
எருசலேமில் வாழ்ந்த தாவீது ராஜாவைப் போல, காத்தேப்பேர் என்ற ஊரில் வாழ்ந்தவர் தான் யோனா என்ற தீர்க்கதரிசி, அந்த காத்தேப்பேர் இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரேத்துக்கு மிக அருகிலும், நசரேத்திலுருந்து கப்பர்நகூமுக்கு போகும் வழியிலும் இருக்கிறது - 23.யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியாவின் பதினைந்தாம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருஷம் அரசாண்டு, 24.கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டு விலகவில்லை. 25.காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான். 26.இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார். 27.இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார் - II இராஜாக்கள் 14:23-27
ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் பேதுரு, இயேசு கிறிஸ்து தன்னை யோனாவின் குமாரனாகிய சீமோனே என்று அழைப்பதை விரும்பியிருக்கலாம், அது பேதுருவுக்கு பெரிய உற்சாகத்தை கூட கொடுத்திருக்கும் - 15.அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16.சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17.இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18.மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 19.பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார் - மத்தேயு 16:15-19
ஆனால் இப்பொழுது பேதுருவை பார்த்து இயேசு கிறிஸ்து "யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா" என்று கேட்ட கேள்வி, பேதுருவே நீ உன் மூதாதையராகிய யோனாவை நேசிக்கிறாயா? இல்லை என்னை நேசிக்கிறாயா? என்று கேட்பதாகவே இருந்தது - 14.இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம். 15.அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 16.இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 17.மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார் - யோவான் 21:14-17
நம் பேருடன், நமது படிப்பையோ, பதவியையோ, ஜாதியையோ, நாம் பிறந்த ஊரையோ அல்லது குடும்ப பெயரோ இணைத்திருப்பது அதன் மேல் நமக்கிருக்கிற நேசத்தையே வெளிப்படுத்துகிறது, இப்படி தான் யோனாவின் குமாரனாகிய சீமோனும் இருந்தார், ஆனால் இப்பொழுது இயேசு கிறிஸ்து கேட்ட கேள்வி, பேதுருவே நீ இன்னும் யோனாவின் குமாரனாகவா இருக்கிறாய்? நான் உன்னை என் இரத்தத்தால் மீட்டு பரலோகத்தின் பிள்ளையாக அல்லவா மாத்தியிருக்கிறேன் என்பதை உணர்த்துவதாகவே இருந்தது
அதனை உணர்ந்து கொண்ட பேதுரு தன்னை "யோனாவின் குமாரனாகிய சீமோன்" என்று சொல்லாமல், தன்னை "இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு" என்று சொல்லி தன்னை ஊழியத்துக்கு அர்பணித்ததை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 1.இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில், 2.பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. 3.நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக - I பேதுரு 1:1-3