You Hypocrites !
Translation in progress from www.parisurthar.com

Many teachings are based on commandments of men (Cultural based) rather than commandments of God - Now when the Pharisees gathered to him, with some of the scribes who had come from Jerusalem, they saw that some of his disciples ate with hands that were defiled, that is, unwashed. For the Pharisees and all the Jews do not eat unless they wash their hands properly, holding to the tradition of the elders, and when they come from the marketplace, they do not eat unless they wash. And there are many other traditions that they observe, such as the washing of cups and pots and copper vessels and dining couches - Mark 7:1-4

And these teaching made commandments of men became more popular than commandment of God, and people ended up followed them more religiously than the commandments of God. Keeping outwardly things clean is one of the commandments of men, But Jesus Christ came to this world to fulfill God's Commandment, and to keep our inwardly things clean - And the Pharisees and the scribes asked him, Why do your disciples not walk according to the tradition of the elders, but eat with defiled hands? And he said to them, Well did Isaiah prophesy of you hypocrites, as it is written, This people honors me with their lips, but their heart is far from me; in vain do they worship me, teaching as doctrines the commandments of men. You leave the commandment of God and hold to the tradition of men. You leave the commandment of God and hold to the tradition of men. And he said to them, “You have a fine way of rejecting the commandment of God in order to establish your tradition! - Mark 7:5-9

இன்று இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் மத்தியில், அவர்களை அறியாமலேயே ஒட்டிக்கொண்டிருக்கிற தேவன் விரும்பாத காரியம் என்ன வென்றால்,  பாரம்பரியம் அல்லது முன்னோர்களின் கலாச்சாரத்தின் நிமித்தமாக செய்யும் காரியங்கள், அநேக நேரங்களில் இவைகள் நல்ல ஆலோசனைகள் போலவும் மற்றவர்களுக்காக செய்வது போலவும் தான் தோன்றும், உதாரணத்திற்கு கல்லறைத் திருவிழா, நற்சாயம் பூசப்பட்ட அந்நிய தெய்வங்களின் பண்டிகைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் என பல காரியங்களைச் சொல்லலாம் - 1.எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். 2.அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள். 3.ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள். 4.கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள். 5.அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள் - மாற்கு 7:1-5



ஆனால் இது தேவனுக்கு ஒரு அருவருப்பான காரியமாக தான் இருக்கிறது - 6.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், 7.மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். 8.நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார். 9.பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது. 10.எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. 11.நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, 12.அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்; 13.நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார் - மாற்கு 7:6-13



வேதாகமம் நமக்கு கற்பிப்பது என்னவென்றால், நம் பரலோக தந்தையாம் தேவனையும், நம்மை சிலுவையின் வேதனையில் பெற்ற தாயாகிய இயேசு கிறிஸ்துவையும் நேசித்து அவரை கனம்பண்ண வேண்டும் என்பதே, தேவனுடைய எதிர் பார்ப்புகள் இப்படி இருக்கும் பொழுது, பாரம்பரியம் அல்லது கலாச்சாரம் என்கிற மனுஷ உபதேசங்களுக்கு செவி கொடுப்பது எவ்வளவு ஆபத்தானது - 1.அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து: 2.உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம்பண்ணுகிறார்களே! என்றார்கள். 3.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? 4.உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. 5.நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து, 6.உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். 7.மாயக்காரரே, உங்களைக்குறித்து: 8.இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. 9.மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார் - மத்தேயு 15:1-9



இயேசு கிறிஸ்து இந்த பூமியில் இருக்கும் பொழுது, இது போன்ற பாரம்பரிய காரியங்களுக்கு விலகி நமக்கு முன் மாதிரியாக வாழ்ந்துக் காட்டினது மாத்திரம் இல்லாமல், இது போன்ற சூழ்நிலையில் நம் தேவனுக்காக இப்படிப்பட்ட காரியங்களில் இருந்து இருப்பதை குறித்து பேச ஐயப்பட வேண்டியதில்லை என்பதையும் சொல்லி கொடுத்தார் - 37.அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் தன்னுடனேகூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய்ப் பந்தியிருந்தார். 38.அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான். 39.கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது. 40.மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ? 41.உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும். 42.பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே - லூக்கா 11:37-42