O foolish ones
Translation in progress from www.parisurthar.com

Two days after the Crucifixion of Jesus Christ, two of them walking towards Emmaus, One of the persons name is Cleopas, What is the another person name who is walking with the broken heart?

That very day two of them were going to a village named Emmaus, about seven miles from Jerusalem, and they were talking with each other about all these things that had happened. While they were talking and discussing together, Jesus himself drew near and went with them. But their eyes were kept from recognizing him. And he said to them, “What is this conversation that you are holding with each other as you walk?” And they stood still, looking sad. Then one of them, named Cleopas, answered him, “Are you the only visitor to Jerusalem who does not know the things that have happened there in these days?” - Luke 24:13-18

Christ response tells that the another person know him very well, and heard him many times saying about his suffering and resurrection - And he said to them, “What things?” And they said to him, “Concerning Jesus of Nazareth, a man who was a prophet mighty in deed and word before God and all the people, and how our chief priests and rulers delivered him up to be condemned to death, and crucified him. But we had hoped that he was the one to redeem Israel. Yes, and besides all this, it is now the third day since these things happened. Moreover, some women of our company amazed us. They were at the tomb early in the morning, and when they did not find his body, they came back saying that they had even seen a vision of angels, who said that he was alive. Some of those who were with us went to the tomb and found it just as the women had said, but him they did not see.” And he said to them, “O foolish ones, and slow of heart to believe all that the prophets have spoken! Was it not necessary that the Christ should suffer these things and enter into his glory?” And beginning with Moses and all the Prophets, he interpreted to them in all the Scriptures the things concerning himself. So they drew near to the village to which they were going. He acted as if he were going farther, but they urged him strongly, saying, “Stay with us, for it is toward evening and the day is now far spent.” So he went in to stay with them. When he was at table with them, he took the bread and blessed and broke it and gave it to them. And their eyes were opened, and they recognized him. And he vanished from their sight - Luke 24:15-31

At the end, Luke has mentioned the another person name as Simon, but which Simon? They said to each other, “Did not our hearts burn within us while he talked to us on the road, while he opened to us the Scriptures?” And they rose that same hour and returned to Jerusalem. And they found the eleven and those who were with them gathered together, saying, “The Lord has risen indeed, and has appeared to Simon!” Then they told what had happened on the road, and how he was known to them in the breaking of the bread - Luke 24:32-35

And Apostle Paul confirmed that it was Peter (Cephas) who met Christ on the road of Emmaus - There are that he was buried, that he was raised on the third day in accordance with the Scriptures, and that he appeared to Cephas, then to the twelve - 1 Corinthians 15:4-5

Peter had denied Christ three times - But again he denied it. And after a little while the bystanders again said to Peter, “Certainly you are one of them, for you are a Galilean.” But he began to invoke a curse on himself and to swear, I do not know this man of whom you speak - Mark 14:70-71

But heaven called out Peter name first to convey the message of resurrection, the message of good news for the entire world - And he said to them, “Do not be alarmed. You seek Jesus of Nazareth, who was crucified. He has risen; he is not here. See the place where they laid him. But go, tell his disciples and Peter that he is going before you to Galilee. There you will see him, just as he told you.” Mark 16:6-7


Why Peter went with Cleopas? Though Peter had denied Christ, He never compromised his love on Jesus, even after the crucifixion he remembered Lord's commandment and paired with Cleopas - After these things the Lord appointed seventy others also, and sent them two by two before His face into every city and place where He Himself was about to go - Luke 10:1

Like Peter you are so important for Christ, so don't think about your failure and come to Christ as you are.

மரித்து உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்து எம்மாவு சென்ற இரண்டுபேருக்கு தரிசனமானார், அதில் ஒருவரின் பெயர் கிலெயோப்பா என்பதை எளிதாய் அறிந்துக் கொள்ளலாம், ஆனால் மற்றொரு நபர் யாராக இருக்கும்? - 13.அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள். 14.போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். 15.இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார். 16.ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. 17.அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். 18.அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான் - லூக்கா 24:13-18


இயேசு கிறிஸ்து புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே என்று அழைத்ததை பார்க்கும் பொழுது, அந்த நபர் இயேசு கிறிஸ்துவை நன்றாய் அறிந்தவராவும், கர்த்தருடன் நெருங்கிய நட்புள்ளவராகவும் இருந்திருக்க வேண்டும் என்பதை அறிந்துக் கொள்ளலாம் - 19.அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார். 20.நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். 21.அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது. 22.ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், 23.அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள். 24.அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள். 25.அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, 26.கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, 27.மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார் - லூக்கா 24:19-27


இப்படி இயேசு கிறிஸ்து புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே என்று அழைத்ததற்கு காரணம், எம்மாவுக்கு சென்ற அந்த இரண்டு பேரில் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் பிரதான சீஷனாகிய பேதுருவாகும் - 34.கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு, 35.வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள் - லூக்கா 24:34-35


அப்போஸ்தலனாகிய பவுலும், இயேசு கிறிஸ்து தன் சீஷர்களில் பேதுருவுக்கு தான் முதலில் தரிசனமானார்  என்று உறுதிப்படுத்தியுள்ளார் - 4.அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, 5.கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். 6.அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். 7.பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். 8.எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார் - I கொரிந்தியர் 15:4-8


புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே

இயேசு கிறிஸ்து, பேதுருவை புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே என்று அழைத்தது கர்த்தரின் உயிர்த்தெழுதலை பேதுரு புரிந்துக் கொள்ளாதது மாத்திரம் இல்லாமல், பேதுருவின் மேல் கர்த்தர் வைத்திருந்த அன்பும் உரிமையும் கூட காரணமாகும் - 25.அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, 26.கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, 27.மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார் - லூக்கா 24:19-27


இரண்டிரண்டு பேராக

ஏன் பேதுரு தனியாக எம்மாவு கிராமத்துக்குச் செல்லாமல் கிலெயோப்பாவுடன் சென்றார்? காரணம் இயேசு கிறிஸ்து தன் சீஷர்களிடம் இரண்டிரண்டு பேராக செல்ல கட்டளையிட்டிருந்தார் - இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார் - லூக்கா 10:1