What was his Answer?
Translation in progress from www.parisurthar.com
தனது சுவிசேஷ புஸ்தகத்தில் எல்லா காரியங்களையும் விளக்கிச் சொன்ன மத்தேயு, கெனேசரேத்து நாட்டு மக்களுக்கு இயேசு கிறிஸ்து சொன்ன பதிலை குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே ஏன்? - 34.பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள். 35.அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, 36.அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள் - மத்தேயு 14:34-36
53.அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரை பிடித்தார்கள். 54.அவர்கள் படவிலிருந்து இறங்கினவுடனே, ஜனங்கள் அவரை அறிந்து, 55.அந்தச் சுற்றுப்புறமெங்கும் ஓடித்திரிந்து, பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள். 56.அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள் - மாற்கு 6:53-56
கெனேசரேத்து நாட்டு மக்கள், இயேசு கிறிஸ்துவிடம் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள், அதன் பின்பு தொட்டு சுகமும் அடைந்தார்கள், அப்படியானால் அவர்களுக்கு கர்த்தர் சொன்ன பதில்(உத்தரவு) எப்படி பட்டதாக இருந்திருக்கும்?
சரி, தொடுங்கள் - என்று சொல்லி இருப்பாரோ?
தொடுங்கள், இனி மேல் இந்த மாதிரி கேட்க கூடாது - என்று சொல்லி இருப்பாரோ?
ஒரு பிள்ளைகள் தன் தகப்பனிடம் இப்படி கேட்கலாமா - என்று சொல்லி இருப்பாரோ?
இதற்காகத் தானே இந்த பூமிக்கு வந்தேன் - என்று சொல்லி இருப்பாரோ?
உண்மை என்னவென்றால் இயேசு கிறிஸ்து சொன்ன பதில் தெய்வீக அன்பு நிறைந்த ஆருதலின் வார்த்தையாகும், அதற்கு ஈடான வார்த்தைகள் இல்லாததினால் தான் மத்தேயுவினால் அதை குறித்து எழுத முடியவில்லை.