Simon, son of Jonah
Translation in progress from www.parisurthar.com

ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் பேதுரு, இயேசு கிறிஸ்து தன்னை யோனாவின் குமாரனாகிய சீமோனே என்று அழைப்பதை விரும்பியிருக்கலாம், அது பேதுருவுக்கு பெரிய உற்சாகத்தை கூட கொடுத்திருக்கும் -  15.அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16.சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17.இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18.மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 19.பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார் - மத்தேயு 16:15-19 



ஆனால் இப்பொழுது பேதுருவை பார்த்து இயேசு கிறிஸ்து "யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா" என்று கேட்ட கேள்வி, பேதுருவே நீ உன் மூதாதையராகிய யோனாவை நேசிக்கிறாயா? இல்லை என்னை நேசிக்கிறாயா? என்று கேட்பதாகவே இருந்தது - 14.இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம். 15.அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 16.இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 17.மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார் - யோவான் 21:14-17

நம் பேருடன், நமது படிப்பையோ, பதவியையோ, ஜாதியையோ, நாம் பிறந்த ஊரையோ அல்லது குடும்ப பெயரோ இணைத்திருப்பது அதன் மேல் நமக்கிருக்கிற நேசத்தையே வெளிப்படுத்துகிறது, இப்படி தான் யோனாவின் குமாரனாகிய சீமோனும் இருந்தார், ஆனால் இப்பொழுது இயேசு கிறிஸ்து கேட்ட கேள்வி, பேதுருவே நீ இன்னும் யோனாவின் குமாரனாகவா இருக்கிறாய்? நான் உன்னை என்  இரத்தத்தால் மீட்டு பரலோகத்தின் பிள்ளையாக அல்லவா மாத்தியிருக்கிறேன் என்பதை உணர்த்துவதாகவே இருந்தது

அதனை உணர்ந்து கொண்ட பேதுரு தன்னை "யோனாவின் குமாரனாகிய சீமோன்" என்று சொல்லாமல், தன்னை "இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு" என்று சொல்லி தன்னை ஊழியத்துக்கு அர்பணித்ததை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 1.இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில், 2.பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. 3.நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக - I பேதுரு 1:1-3