But I say unto you
Translation in progress from www.parisurthar.com

ஏசாயாவின் தீர்க்கதரிசனங்களில் "கர்த்தருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்" என்று சொல்லும் பொழுதும், "வேதம் கர்த்தரிடத்திலிருந்து வெளிப்படும்" என்று சொல்லும் பொழுதும், மெசியாவாக வரப்போகிறவரின் உபதேசம் காலங்காலமாய் சொல்லப்பட்டு வந்த நியாயப்பிரமாண உபதேசங்களுக்கு மாறானதாக இருக்க போகிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம் - 1.இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். 2.அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார். 3.அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். 4.அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும் - ஏசாயா 42:1-4 & 4.என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன். 5.என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும் - ஏசாயா 51:4-5

நியாயப்பிரமாணத்தை எழுதின மோசேயும் இதனை குறித்துச் சொல்லியிருந்தார், அதாவது மெசியாவாக வரப்போகிறவரின் உபதேசம் நியாயப்பிரமாண நூலைப் பார்த்து எழுதப்பட்டதைப் போலவும், நித்திய ஜீவனுக்கான வழியாகவும் இருக்கும் என்று சொல்லியிருந்தார் - 19.இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு, 20.அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள் - உபாகமம் 17:19-20  

இப்படி மெசியாவின் உபதேசம்,  காலங்காலமாய் சொல்லப்பட்டு வந்த உபதேசங்களுக்கு மாறானதாக இருக்க வேண்டியதினால் தான்,  இயேசு கிறிஸ்து தன் முதல் பிரசங்கமாகிய மலை பிரசங்கதிலுருந்து, சீஷர்களுக்கு உபதேசித்த கடைசி பிரசங்கம் வரை "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று உபதேசித்ததைப் பார்க்கலாம் -  21.கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22.நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான் - மத்தேயு 5:21-22

அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார் - யோவான் 16:23


அதனால் தான் இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை கேட்ட யூதர்கள் "புதிய உபதேசம்" என்று சொல்லி சாட்சி கொடுத்தார்கள் - எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் - மாற்கு 1:27


அவர்கள் காலம் காலமாய் பின்பற்றி வந்த நியாயப்பிரமாணத்தை நன்மைக்கேதுவல்லாத கட்டளைகள் என்றும்  ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்கள் என்றே எசேக்கியேல் கூறியுள்ளார் -  23.ஆனாலும் அவர்கள் என் நியாயங்களின்படி செய்யாமல், என் கட்டளைகளை வெறுத்து, என் ஓய்வுநாட்களை பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் பிதாக்களின் நரகலான விக்கிரகங்களின்மேல் நோக்கமாயிருந்தபடியாலும், 24.நான் அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களிலே தூற்றிப்போடுகிறதற்கு வனாந்தரத்திலே ஆணையிட்டேன். 25.ஆகையால் நன்மைக்கேதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன் - எசேக்கியேல் 20:23-25


ஆனால், அதிகாரத்தில் இருந்த பழைமைவாதிகளால் இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள் - 1.இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி: 2.இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார். 3.அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து, 4.இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள் - மத்தேயு 26:1-4


ஆனால் ஏசாயா தீர்க்கதரிசி "கர்த்தருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்" என்று சொன்னது போல, தீவுகளாகிய புறஜாதி மக்களோ இயேசு கிறிஸ்துவை தேவன் என்றும் உலகரட்சகர் என்றும் ஏற்றுக் கொண்டார்கள் - அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள் - அப்போஸ்தலர் 15:3