I have set you an example

Translation in progress from www.parisurthar.com

இந்த பூமிக்கு வந்த இயேசு கிறிஸ்து, நமக்கு ஒரு மாதிரியாக வாழ்ந்ததை தான் இந்த வேத வசனத்தில் பார்க்கிறோம் - நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன் - யோவான் 13:15    

என்னைத் தொடாதே

கிறிஸ்துவை பின்பற்றும் நாம் எப்படி கவனமாக இருக்க வேண்டும், அதாவது ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணோடு நடந்து கொள்ள வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார், உதாரணத்திற்கு தன்னை தேடி வந்த மகதலேனா மரியாளிடம் என்னைத் தொடாதே என்று சொன்ன இயேசு கிறிஸ்து - இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார் - யோவான் 20:17

தன் சீஷர்களிடம் தான் மரணத்தை வென்று உயிர்தெழுந்ததை நிரூபிக்க என்னைத் தொட்டுப்பாருங்கள் என்று சொன்னார் - 36.இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 37.அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். 38.அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? 39.நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, 40.தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார் - லூக்கா 24:36-40


சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்

அது மாத்திரம் இல்லாமல், இயேசு கிறிஸ்து எருசலேமுக்கு வந்த பொழுது அநேக ஸ்திரீகளும் அவரோடே வந்திருந்ததாக பார்க்கிறோம்.

55.மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 56.அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள் - மத்தேயு 27:55-56

40.சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், 41.அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள் - மாற்கு 15:40-41

22.ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், 23.அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள். 24.அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள் - லூக்கா 24:22-24

அப்படி இருந்தும் இரவு வேளைகளில் சீஷர்கள் மாத்திரமே தனியாக இருந்தனர், இப்படி தன் சீஷர்களும் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வழி நடத்தினார் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

1.இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள். 2.இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான் - யோவான் 18:1-2

36.அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; 37.பேதுருவையும், செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார் - மத்தேயு 26:36-37


அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள்

அதை போல ஒருமுறை, இயேசு ஒரு சமாரிய ஸ்திரீயுடன் பேசுவதை பார்த்து சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்களாம், அப்படியென்றால் சீஷர்கள் இயேசு ஸ்திரீயுடன் பேசுவதை பார்த்ததே இல்லை என்று தானே அர்த்தம், இப்படியாக இயேசு கிறிஸ்து ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்துக் காட்டினார் - 25.அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். 26.அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். 27.அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை - யோவான் 4:25-27