Whatever opens the womb
Translation in progress from www.parisurthar.com
உபாகமம் புஸ்தகத்தில், கன்னிமையின் அடையாளத்தை குறித்து சில காரியங்களை பார்க்கலாம், இந்த கன்னிமையின் அடையாளம் பெண்களுக்கே உரிய ஒரு சிறப்பு அம்சமாக இருக்கிறது, இந்த ஜவ்வு போன்ற கன்னிமையின் அடையாளம் கணவனும் மனைவியும் முதல் முறை சேரும் சமயத்தில் கிழிபடுவதாய் இருக்கிறது, இந்த கன்னிமை ஜவ்வு கிழிபடும் சமயத்தில் ரத்தக் கசிவுகள் ஏற்பட்டு கணவனும் மனைவியும் சேர்ந்ததற்கு ஒரு வெளிப்படையான அடையாளத்தை ஏற்படுத்துகிறது, அதனை குறித்த காரியத்தை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 13.ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்தபின்பு அவளை வெறுத்து: 14.நான் இந்த ஸ்திரீயை விவாகம்பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது கன்னிமையைக் காணவில்லை என்று அவள்மேல் ஆவலாதியான விசேஷங்களைச் சாற்றி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்; 15.அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள். 16.அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து, 17.நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள். 18.அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து, 19.அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது. 20.அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால், 21.அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம்பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய் - உபாகமம் 22:13-21
இந்த கன்னிமையின் ஜவ்வு கிழிந்து போனால் அதை மறுபடியும் தைக்க முடியாது, ஒருவருக்கு கை எலும்பு முறிந்து விட்டால் அதை ஒட்ட வைக்க மருத்துவர்கள் முயற்சி செய்வார்கள், ஆனால் இந்தக் கன்னிமையின் ஜவ்வு கிழிந்து போனால் அதை மறுபடியும் தைப்பதற்கு இந்த உலகத்தில் எந்த மருத்துவமும் கிடையாது, இது இறைவனின் அற்புத படைப்பாகவே இருக்கிறது.
ஆடு மாடு போன்ற பாலூட்டிகளுக்கும் இந்த கன்னிமையின் ஜவ்வு இருக்கத்தான் செய்கிறது, ஆனால் இந்த கன்னிமையின் ஜவ்வு ஆடு மாடுகள் இனப்பெருக்கத்திற்காக சேரும்போது கிழியாது, உதாரணத்திற்கு ஒரு பசுவிடம் ஒரு காளை மாடு முதல் முறையாக சேரும்போது அந்த பசுவின் கன்னிமையின் ஜவ்வு கிழியாது, அதனால் தான் ஆடு மாடு போன்ற பாலூட்டிகள் இனப்பெருக்கத்திற்காக இணையும் போது கன்னிமையின் ஜவ்வு கிழிந்ததற்கான அடையாளமாகிய ரத்த கசிவு உண்டாவதில்லை.
அப்பயென்றால் ஆடு மாடுகளுக்கு இந்த கன்னிமையின் ஜவ்வு எப்போது கிழியும்? அது அந்த பசுவானது தனது முதல் கன்றை ஈனும் போது கிழிவதாய் இருக்கிறது, இதைத்தான் கற்பந்திறந்து பிறக்கும் தலையீற்று என்று வேதாகமம் அழைக்கிறது, அதாவது கருப்பையின் மேலிருக்கிற கன்னிமையின் ஜவ்வை கிழித்து கொண்டு பிறப்பது என்பது அர்த்தமாகும், இப்படி கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணை பலியிட வேண்டும் என்று தான் கர்த்தர் கட்டளையிட்டார் - 11.மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது, 12.கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள். 13.கழுதையின் தலையீற்றையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக. 14.பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். 15.எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்துதேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள் வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். 16.கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான் - யாத்திராகமம் 13:11-16
இஸ்ரவேல் மக்கள், கர்த்தருக்காக விசேஷித்து கொண்ட பெண்ணாட்டை பாதுகாத்து அது தனது முதல் கன்றை ஈனும் போது, அதன் கன்னிமையின் ஜவ்வு கிழிவதை உறுதி செய்து அந்த தலையீற்றை பாதுகாத்து வளர்த்து பலியிடுவது வழக்கம், ஆனால் கர்த்தர் இந்த காரியத்தை குறித்துச் சொல்லும் போது, மனுஷரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறு என்று சொன்னது ஒரு குழப்பமாகவே இருந்தது, ஏனென்றால் கன்னிமையின் ஜவ்வு கிழியாமல் எந்த ஒரு பெண்ணாலும் கருத்தரிக்க முடியாது, பின்பு ஏன் கர்த்தர் மனுஷரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறு என்று சொன்னார்? இது எப்படி சாத்தியமாகும்? இது மனிஷரால் கூடாத காரியமாச்சே - 1.கர்த்தர் மோசேயை நோக்கி: 2.இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார். 3.அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம் - யாத்திராகமம் 13:1-3
இந்த கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேரானவரை குறித்து எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தப்பித்து வந்து கொண்டிருந்த இஸ்ரவேல் மக்கள், தங்களுக்கு முன்பாக செங்கடல் இருக்கும் அந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தர் இந்த கட்டளையை கொடுத்தார் என்றால், அது நமது இரட்சிப்புக்கு அடுத்த காரியமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது, அதனால் தான் ஏசாயா தீர்க்கதரிசி தேவனே இதை செய்து முடிப்பார் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார் - ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் - ஏசாயா 7:14
அதனால் தான் பரிசுத்த தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்து சொல்லும் போது, கன்னிகையான மரியாள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்றும், அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் யோசேப்பு அவளை அறியாதிருந்தார் என்றும் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது - 18.இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19.அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 20.அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21.அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 22.தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23.அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். 24.யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; 25.அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான் - மத்தேயு 1:18-25
அதனால் தான் லூக்கா தன்னுடைய சுவிசேஷ புத்தகத்தில், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை கர்ப்பந்திறந்து பிறந்தவர் என்றே குறிப்பிட்டுள்ளார், - 22.மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது, 23.முதற்பேறான(கர்ப்பந்திறந்து பிறந்த) எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும், 24.கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள் - லூக்கா 2:22-24
இது மூல பாஷையில் கர்ப்பந்திறந்து முதற் பிறந்தவர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது - 22.And when the time came for their purification according to the Law of Moses, they brought him up to Jerusalem to present him to the Lord 23.as it is written in the Law of the Lord, Every male who first opens the womb shall be called holy to the Lord. 24.and to offer a sacrifice according to what is said in the Law of the Lord, a pair of turtledoves, or two young pigeons - Luke 2:22-24
இந்த கர்ப்பந்திறந்து முதற் பிறந்தவரின் சிலுவை மரணத்தினால் மீட்கப்பட்ட நம்மை, பிதாவாகிய தேவன் "என்னுடையவர்கள்" என்றே அழைக்கிறார், இது இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் நமக்கு உண்டான நித்திய ஜீவனாய் இருக்கிறது, அவருக்கே எல்லா துதியும் கணமும் மகிமையும் உரியது - 11.பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 12.இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள் - எண்ணாகமம் 3:11-12