Beware of the leaven of the Pharisees and Sadducees
Translation in progress from www.parisurthar.com

சீஷர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து மாத்திரம் போதும் என்று தீர்மானம் எடுக்க பல அனுபவங்கள் தேவைப்பட்டது, அப்படி அவர்கள் பக்குவப்பட்டதின் பிரதிபலிப்பு தான், அவர்கள் மீதம் எடுத்த அப்பத்தை தல்மனூத்தாவிலேயே விட்டு விட்டு, இயேசு கிறிஸ்து மாத்திரம் போதும் என்று படவில் ஏறினது.

இதனை குறித்து மார்க் சொல்லும் பொழுது அவர்கள் படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் என்று எழுதியுள்ளார் - சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது - மாற்கு 8:8-14

மத்தேயு இதனை குறித்துச் சொல்லும் பொழுது, சீஷர்கள் கடைசியாக இயேசு என்னும் அக்கரைக்கு சேர்ந்து விட்டதாக எழுதியுள்ளார் - அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள் - மத்தேயு 16:5

இப்படி பக்குவப்பட்ட சீஷர்களிடம் இயேசு கிறிஸ்து சொன்னது தான், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்பது - 6இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார். 7நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். 8இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன? 9இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்; 10ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா? 11பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். 12அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள் - மத்தேயு 16:6-12

காரணம் பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தில் பல காரியங்கள் இருந்தன, ஏன் அவர்கள் தேவனை குறித்தும் உபதேசிப்பார்கள், ஆனால் அவர்கள் உபதேசத்தில் இயேசு கிறிஸ்து இல்லை.

இப்படி பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று சொல்லும் பொழுது, பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் மோசம் போக்கும் உபதேசத்தை நம்ப கூடாது என்பது மாத்திரம் இல்லாமல், நம் உபதேசத்தில் இயேசு கிறிஸ்து மாத்திரமே இருக்க வேண்டும் என்கிற கட்டளையும் அடங்கி இருக்கிறது.