Seated themselves in the chair of Moses
Translation in progress from www.parisurthar.com

வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்னது, கர்த்தருக்குரிய முதன்மையான இடத்தை ஊழியக்காரர்கள் திருடுவதை குறித்த ஆதங்கமாகவே இருக்கிறது - 1.பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: 2.வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள் - மத்தேயு 23:1-2


அப்படிப்பட்டவர்கள், மற்றவர்கள் காணும் படியாக நற்காரியங்களை செய்பவர்களாகவும், மக்களை கவர்ந்து, தாங்கள் மாத்திரமே விருத்தியடைய வேண்டும் என்று உழைப்பவர்களாகவும் (காப்புநாடாக்களை அகலமாக்கி), மன மேட்டிமை கொண்டு(வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி), விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மற்றவர்களால் அடைமொழிகளோடு அழைக்கப்பட விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்களாம் - 3.ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். 4.சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். 5.தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, 6.விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், 7.சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள் - மத்தேயு 23:3-7


நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்

இப்படி பட்டவைகள் சத்துருவின் அடையாளமாகவும், தேவன் வெறுக்கிற காரியமாகவும் இருப்பதினால் தான், கர்த்தர் தன் சீஷர்களுக்கு வேதபாரகர் மற்றும் பரிசேயரின் செய்கையின்படி செய்யாதிருங்கள் என்றும், ரபீ என்றழைக்கப்படாதிருங்கள் என்றும் கட்டளைகளை கொடுத்தார் - 8.நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9.பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10.நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். 11.உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 12.தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் - மத்தேயு 23:8-12


யார் சிங்காசனத்தில் உட்கார தகுதியுள்ளவர்?


வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார துகுதியற்றவர்களாய் இருந்தார்கள், காரணம் அவர்களால் தாங்கள் போதிக்கின்ற படி வாழ முடியவில்லை 


தாங்கள் போதிக்கின்ற படி வாழ்ந்துக் காட்ட யாரால் தான் கூடும்? அதனால் தான் கர்த்தர் தன் சீஷர்களிடம், வேதபாரகர் மற்றும் பரிசேயரின் செய்கையின்படி செய்யாதிருங்கள் என்றார், அப்படியென்றால் சிங்காசனத்தில் உட்கார தகுதியுள்ளவர் யார்? யாரால் தான் போதிக்கின்ற படி வாழ்ந்துக் காட்ட முடியும்? அது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே - 1.பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: 2.வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; 3.ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். 4.சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். 5.தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, 6.விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், 7.சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள் - மத்தேயு 23:1-10



தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து


மேலும் அந்திக்கிறிஸ்து, கேட்டின் மகனாகவும் பாவமனுஷனாகவும் வெளிப்படும் பொழுது, அவன் தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து இருப்பானாம், காரியங்கள் இப்படி இருக்க, தேவனுடைய ஆலயத்தில் முதன்மையான இடத்தில் உட்கார்வது எவ்வளவு ஆபத்தானது - 1.அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், 2.ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். 3.எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 4.அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான் - II தெசலோனிக்கேயர் 2:1-4