Believe in the light
Translation in progress from www.parisurthar.com
ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபினால் எழுதப்பட்ட தீர்க்கதரிசன சங்கீதம், இயேசு கிறிஸ்துவின் திரித்துவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதினால், "நீங்கள் தேவர்கள் என்றும்" "உன்னதமானவரின் மக்கள் என்றும்" பன்மையில் சொல்லப்பட்டதுள்ளது - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள். 8.தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர் - சங்கீதம் 82:6-8
அது மாத்திரம் இல்லாமல், நீங்கள் மனுஷரைப்போலச் செத்து என்று இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், தேவனே என்று அழைத்து இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்றாயிருக்கிறார்கள் என்கிற இரகசியத்தையும், தேவனே எழுந்தருளும் என்று இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் தீர்க்கதரிசனமாக உரைக்கிறது.
இந்த தீர்க்கதரிசனத்தை யாரும் உரிமை கொண்டாட பொழுது, இயேசு கிறிஸ்து மாத்திரமே இது தன்னை குறித்து சொன்னது என்று சொல்லி, தன்னை தேவனுடைய குமாரன் என்றும், நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றும் இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தினார் - 30.நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். 31.அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். 32.இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். 33.யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். 34.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? 35.தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, 36.பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? - யோவான் 10:30-36