Three Signs Explanation
Translation in progress from www.parisurthar.com

இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்  


நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திரியேக தேவனின் (பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியின்) தற்சுரூபமாக, அதாவது பிதாவாகவும் (என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதா - யோவான் 14:10), வார்த்தை என்கிற குமாரனாகவும்(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), பரிசுத்த ஆவியானவராகவுமாகவும்(கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இருக்கின்றார்.

இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த அப்போஸ்தலனாகிய யோவான், தேவரகசியங்களை குறித்துச் சொல்லும் பொழுது, பிதாவாகிய பரலோகத்தின் தேவன் - பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் ஒரே தேவனாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7

ஆனால் குமாரனை குறித்து சொல்லும் பொழுதுதோ, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய மூன்று பேருமே, குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் ஜலம், இரத்தம், ஆவியாக இருந்தார்கள் என்றும், இது குமாரனைக்குறித்துக் பிதாவாகிய தேவனே கொடுத்த சாட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார் - 8.பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. 9.நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே - I யோவான் 5:8-9, அதனால் தான் இயேசு கிறிஸ்துவை குறித்த தீர்க்கதரிசனம் இப்படிச் சொல்லுகிறது - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7


மூன்று அடையாளங்களின் விளக்கம்

கர்த்தர் இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்க மோசேயை அனுப்பிய போது, மூன்று அடையாளங்களை கொடுத்து அனுப்பினார் - 1.அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான். 2.கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். 3.அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகி ஓடினான். 4.அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று. 5.ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். 6.மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. 7.அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று. 8.அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். 9.இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன் வாக்குக்குச் செவிகொடாமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார் - யாத்திராகமம் 4:1-9


இந்த மோசே தான் சகோதரனாகிய ஆரோனுடன் இஸ்ரவேல் மக்களை சந்தித்தபோது கர்த்தர் தனக்கு கொடுத்த அந்த மூன்று அடையாளங்களையும் செய்து காட்டினான் - 28.அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான். 29.மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள். 30.கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான். 31.ஜனங்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள் - யாத்திராகமம் 4:28-31


ஆனால் பார்வோனுக்கோ கர்த்தர் அந்த மூன்று அடையாளங்களில் ஒரே ஒரு அடையாளத்தை மாத்திரமே கொடுக்க அனுமதித்தார் - 9.கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 9.உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால், அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார். 10.மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று. 11.அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். 12.அவர்கள் ஒவ்வொருவனாகத் தன்தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று. 13.கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான் - யாத்திராகமம் 7:8-13



இஸ்ரவேல் மக்களிடம் மூன்று அடையாளங்களை காண்பித்த மோசேயிடம் பார்வோன் தனக்கு ஒரே ஒரு அடையாளத்தை மாத்திரம் கேட்டான், அப்பொழுது மோசேயும் ஆரோனும் தங்களிடம் மூன்று அடையாளங்கள் இருந்தும் பார்வோனுக்கு ஒரே ஒரு அடையாளத்தை மாத்திரம் காண்பித்தார்கள்.


பார்வோன்களாயிருந்த வேதபாரகரும் பரிசேயரும்


இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில் பார்வோன்களுக்கு ஒப்பாயிருந்த பரிசேயரும் வேதபாரகரும் இயேசு கிறிஸ்துவிடம் அன்று பார்வோன் எப்படி மோசையிடம் ஒரு அடையாளத்தை கேட்டானோ அதுபோலவே கர்த்தரிடமும் ஒரு அடையாளத்தை கேட்டார்கள், இப்படி தன்னை குறித்து பேசினவர்களை, பொல்லாதவர்கள் என்றும், அடையாளத்தைத் தேடுகிறவர்கள் என்றும் சொன்ன கர்த்தர், அவர்களுக்கு ஒரு அடையாளத்தை மாத்திரம் கொடுக்கப் போவதாக சொன்னார், அது தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த அடையாளம், இப்படி கர்த்தர் அனுமதித்ததினால் தான், இன்று பலரும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், கர்த்தரின் உயிர்த்தெழுதலையும் கூட அறிந்தவர்களாக இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று ஏற்றுக் கொள்ளவும் முடிய வில்லை, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளவும் முடிய வில்லை, இதை தான் கர்த்தர் இவர்களுக்கு யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் கொடுக்கப்படுவதில்லை என்று சொன்னார் - 38.Then some of the scribes and Pharisees answered, saying, “Teacher, we want to see a sign from You.” 39.But He answered and said to them, “An evil and adulterous generation seeks after a sign, and no sign will be given to it except the sign of the prophet Jonah. 40.For as Jonah was three days and three nights in the belly of the great fish, so will the Son of Man be three days and three nights in the heart of the earth - Matthew 12:38-40


சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார், யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்


இப்படி தன்னுடைய சிலுவை பாடுகளை குறித்துச் சொன்ன கர்த்தர், வேறு இரண்டு அடையாளங்களை குறித்து சொன்னது தான், சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார், யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்பது, இது நம்மை இழுத்துக் கொள்ளுகிற பிதாவையும், நம்மை அபிஷேகிக்கிற பரிசுத்த ஆவியானவரையும் குறித்த அடையாளம் ஆகும், இந்த அடையாளம் பெற்றதினால் தான், நாம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக பரலோகத்தின் தேவனை பிதா என்று அழைக்கும் புத்திரசுவீகாரம் பெற்றவர்களாகவும், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றவர்களாகவும் இருக்கிறோம், இது தேவனுடைய கிருபையே அன்றி வேறொன்றும் இல்லை - 41.The men of Nineveh will rise up in the judgment with this generation and condemn it, because they repented at the preaching of Jonah; and indeed a greater than Jonah is here. 42.The queen of the South will rise up in the judgment with this generation and condemn it, for she came from the ends of the earth to hear the wisdom of Solomon; and indeed a greater than Solomon is here. 43.When an unclean spirit goes out of a man, he goes through dry places, seeking rest, and finds none. 44.Then he says, ‘I will return to my house from which I came.’ And when he comes, he finds it empty, swept, and put in order. 45.Then he goes and takes with him seven other spirits more wicked than himself, and they enter and dwell there; and the last state of that man is worse than the first. So shall it also be with this wicked generation - Matthew 12:41-45