Fill up, then, the measure of your fathers
Translation in progress from www.parisurthar.com

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள், என்று கர்த்தர் சொன்னது பரலோகத்தின் தேவனே நமக்கு பிதாவாக இருக்கிறார் என்கிற ரகசியத்தை அறிவிப்பதாகவே இருக்கிறது - 8.நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9.பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10.நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். 11.உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 12.தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் - மத்தேயு 23:1-12



இப்படி பரலோகத்தின் தேவனே நமக்கு பிதாவாக இருக்கும் போது, நம்முடைய வம்சங்களை குறித்து மேன்மை பாராட்டுவது தேவனுக்கு முன்பு ஒரு அருவருப்பான காரியமாக தான் இருக்கிறது, காரணம் இந்த உலகத்தில் வாழ்ந்த எல்லா மனிதரும்  ஏதோ ஒரு விதத்தில் குற்றவாளியாக தான் இருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது ஒருவரை நமது முன்னோர்களாக சொல்லி பெருமை பாராட்டுவது தேவனுக்கு முன்பு தகாத காரியமாக தான் இருக்கிறது, அப்படி பெருமை பாராட்டுபவர்களை பார்த்து தான் கர்த்தர் இதை சொன்னார் -  43.Woe to you Pharisees! For you love the best seats in the synagogues and greetings in the marketplaces. 44.Woe to you, scribes and Pharisees, hypocrites! For you are like graves which are not seen, and the men who walk over them are not aware of them.” 45.Then one of the lawyers answered and said to Him, “Teacher, by saying these things You reproach us also.” 46.And He said, “Woe to you also, lawyers! For you load men with burdens hard to bear, and you yourselves do not touch the burdens with one of your fingers. 47.Woe to you! For you build the tombs of the prophets, and your fathers killed them. 48.In fact, you bear witness that you approve the deeds of your fathers; for they indeed killed them, and you build their tombs - Luke 11:43-48



இப்படி, தங்களது முன்னோர்களை "எங்கள் பிதாக்கள்" என்று சொல்லிக் கொண்டு திரிபவர்களை பார்த்து தான் விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்? என்றும் நம் கர்த்தர் கேட்டார் - 29.மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: 30.எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். 31.ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள். 32.நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள். 33.சர்ப்பங்களே, விரியன்பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்? - மத்தேயு 23:29-33



ஒருவேளை விசுவாசத்தின் தகப்பனாகிய ஆபிரகாமே நம்முடைய முன்னோராக இருந்தால் கூட அதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதைத் தான் யோவான் ஸ்நானகன் பரிசேயரையும் சதுசேயரையும் பார்த்து இப்படி சொன்னார் - 7.பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? 8.மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். 9.ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 10.இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 11.மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் - மத்தேயு 3:7-11(லூக்கா 3:7-9)



ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று சொல்லி தேவ கோபாக்கினைக்கு ஆளானவர்கள் மத்தியிலே, ஏசாயா என்பவர் "ஆபிரகாம் எங்களை அறியான், தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்" என்று சொல்லி தேவனுக்கு பிரியமான தீர்க்கதரிசியாக வாழ்ந்தார் - தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம் - ஏசாயா 63:16

பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள் 

இப்படி பட்டவைகள் சத்துருவின் காரியமாய் இருப்பதினால் தான், கர்த்தர் தன் சீஷர்களை "நீங்களோ" என்று அழைத்து பின் வரும் காரியங்களை சொல்லி கொடுத்தார் - 8.நீங்களோ ரபீ(தீர்க்கதரிசி என்றோ, போதகர் என்றோ, வரம் பெற்றவர் என்றோ) என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9.பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10.நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். 11.உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 12.தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் - மத்தேயு 23:1-12



43.பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள். 44.மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார். 45.அப்பொழுது நியாயசாஸ்திரிகளில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான். 46.அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள். 47.உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். 48.ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள் - லூக்கா 11:43-48



29.மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: 30.எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். 31.ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள். 32.நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள் - மத்தேயு 23:29-32