Isaac or Ishmael
Translation in progress from www.parisurthar.com

தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து மனுவுருவெடுக்க தெரிந்துக் கொண்ட வம்சத்தை வம்சவரலாறு இல்லாதவரின் வம்சவரலாறு என்கிற தலைப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இந்த வம்சவரலாற்றில் ஈசாக்கு எப்படி இடம்பெற்றார், ஏன் இஸ்மவேல் இடம் பெறவில்லை என்பதை இந்த  தொகுப்பில் பார்க்கலாம், காரணம் தேவனால் அழைக்கப்பட்ட ஆபிரகாமுக்கு இஸ்மவேல் மூத்த குமாரனாய் பிறந்ததினால், ஒரு கூட்டத்தார் இஸ்மவேலின் வம்சாவளியையும், முஹமது நபியையும், குரானையும், இஸ்லாம் மதத்தையும் நம்பி கொண்டிருக்கிறார்கள், வேதாகமம் இதற்கு என்ன பதில் சொல்லுகிறது?

ஒருமுறை மம்ரேயின் சமபூமியிலே ஆபிரகாம் தேவன் தரிசனம் ஆனார், அப்பொழுது ஆபிரகாம் தேவனை அப்பம் புசிக்க வரும்படி வருந்தி கேட்டுக்கொண்டான் - 1.பின்பு, கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, 2.தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து; 3.ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். 4.கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். 5.நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள் - ஆதி 18:1-5

அப்பொழுது கர்த்தரால் தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்ட ஆபிரகாம், சாராளின் சந்ததியில் தான் கர்த்தர் ஜீவ அப்பமாக வரப்போகிறார் என்பதை அறிவுறுத்த தன்னுடைய வீட்டில் ஆகார் இருந்த பொழுதும் சாராளை அப்பம் சுட சொல்லுகிறார், இப்படி தீர்க்கதரிசியான ஆபிரகாம், யாரை அப்பம் சுட சொன்னாரோ அவரின் சந்ததியில் வந்தவர் தான் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து - 6.அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான் - ஆதி 18:6

இப்படி சாராளை அப்பம் சுட சொன்ன ஆபிரகாம், கடைசியாக சாப்பாடு பரிமாறும் பொழுது, சாராள் சமைக்க வேண்டிய அப்பத்தை தவிர மற்ற எல்லா உணவுகளையும் பரிமாறினார் - 7.ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். 8.ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள் - ஆதி 18:7-8


சாராள் ஏன் அப்பம் சமைக்கவில்லை?  ஏன் என்றால் ஆபிரகாம் "அப்பம்" என்று சொன்னது சாரளின் சந்ததியில் வரப்போகிற கிறிஸ்துவை குறித்ததாய் இருந்தது, அதற்கான காலம் இன்னும் வராமல் தான் இருந்தது - 9.அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். 10.அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள் - ஆதி 18:9-10

இதை தான் அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதின புஸ்தகத்தில் இவ்வாறு சொல்லுகிறார் - அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே - ரோமர் 9:9

இந்த வாக்குத்தத்தம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்து சொல்லப்பட்டத்தினால் தான் "திரும்ப வருவேன்" என்று சொன்ன கர்த்தர் ஈசாக்கு பிறந்த பொழுது எந்த தரிசனமும் தரவில்லை - 1.கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார். 2.ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். 3.அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான். 4.தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான் - ஆதியாகமம் 21:1-4

மாறாக, தேவன் தான் முன்குறித்த உற்பவகாலத்திட்டத்தில் ஈசாக்கின் வம்சத்தில் ஜீவ அப்பமாக வெளிப்பட்டார் - 48.ஜீவ அப்பம் நானே. 49.உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். 50.இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. 51.நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார் - யோவான் 6:48-51