What Bible says about judaism?
Translation in progress from www.parisurthar.com

கிறிஸ்தவர்கள் பலரும், யூத மதத்தை கிறிஸ்தவத்தின் தாய் மதமாகத் தான் பார்க்கிறார்கள், இதற்கு முக்கியமான காரணம் யூதர்கள் வேதாகமத்திலுள்ள பழைய ஏற்பாட்டிற்கு சொந்தக்காரர்களாக இருப்பது தான்.


ஆனால் இந்த யூதர்கள் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளால் சொல்லப்பட்ட மேசியா இயேசு கிறிஸ்து தான் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள், பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவன் மெசியாவை குறித்துச் சொன்னபொழுது, அதை கேட்க மறுத்தவர்களிடம் "தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?" என்று  கேட்டார்  - 10.பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி: 11.நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார். 12.ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சைசெய்யமாட்டேன் என்றான். 13.அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ? 14.ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் - ஏசாயா 7:10-14


இப்படி இயேசு கிறிஸ்துவை மேசியாவாக ஏற்றுக் கொள்ளாத யூத மதமானது, தேவனை விசனப்படுத்துகிற மதமாகவும், கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல்பட்ட முதல் மதமாகவும் இருக்கிறது - ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள் - யோவான் 9:22b


அவர்களுடைய வேதத்தில்

கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளா விட்டால், பழைய ஏற்பாடாகிய தேவனால் அருளப்பட்ட வேதமாகம் (தோரா) கூட "அவர்களுடைய வேதமாக"  அதாவது மனிதர்களின் வேதமாக தான் இருக்கிறது - 23.என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். 24.வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள். 25.முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று - யோவான் 15:23-25 


இப்படி அவர்கள் காலம் காலமாய் பின்பற்றி வரும் வேதத்தை (நியாயப்பிரமாணத்தை), நன்மைக்கேதுவல்லாத கட்டளைகள் மற்றும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்கள் என்றே எசேக்கியேல் கூறியுள்ளார்23.ஆனாலும் அவர்கள் என் நியாயங்களின்படி செய்யாமல், என் கட்டளைகளை வெறுத்து, என் ஓய்வுநாட்களை பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் பிதாக்களின் நரகலான விக்கிரகங்களின்மேல் நோக்கமாயிருந்தபடியாலும், 24.நான் அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களிலே தூற்றிப்போடுகிறதற்கு வனாந்தரத்திலே ஆணையிட்டேன். 25.ஆகையால் நன்மைக்கேதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன் - எசேக்கியேல் 20:23-25