மனிதவரலாற்றில் யாருமே தேவனை "பிதா" என்று அழைத்தது கிடையாது. அப்படி தேவனை, அப்பா பிதாவே என்று அழைப்பதற்கு யாருக்கும் தகுதியும் இருக்கவில்லை, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளால் கூட தேவனை பிதா என்று அழைக்க முடியவில்லை, அது இயேசு கிறிஸ்துவால் மாத்திரமே கூடியதாய் இருந்தது - 13.பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், 14.தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, 15.கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, 16.புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார் - யோவான் 2:13-16
இப்படி இயேசு கிறிஸ்து தேவனை "என் பிதா" என்று சொன்னதை ஏற்று கொள்ள முடியாத யூத மக்களால் அவரைக் கொலைசெய்ய எத்தனித்தார்கள் - 16.இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள். 17.இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார். 18.அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள் - யோவான் 5:16-18
இப்படி இயேசுவை கொலைசெய்ய பார்த்த மக்கள் மத்தியிலும், சிலர் இயேசுவை தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக் கொண்டார்கள், அவர்களை இயேசு கிறிஸ்து தனது சொந்த இரத்ததினாலே தேவனுடைய பிள்ளைகளாக, அதாவது தேவனை பிதா என்று அழைக்க தகுதி உள்ளவர்களாக மாற்றினார் - 17.இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். 18.மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள் - யோவான் 20:17-18
இப்படி இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்ட நாம் தேவனை அப்பா, பிதாவே! என்று அழைக்க புத்திரசுவிகாரம் பெற்றவர்களாய் இருக்கிறோம், இது தேவனால் உண்டான கிருபை, இதுவே மரணத்தை நோக்கி ஓடிகொண்டிருக்கும் நமக்கு கிடைத்த சுவிஷேகமாகவும், உயிர்தெழுதலின் நற்செய்தியாகவும் இருக்கிறது - 1.பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. 2.தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான். 3.அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம். 4.நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, 5.காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார். 6.மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். 7.ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய் - கலாத்தியர் 4:1-7