சீஷர்களுக்கு தங்கள் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து மாத்திரம் போதும் என்று தீர்மானம் எடுக்க பல அனுபவங்கள் தேவைப்பட்டது, அப்படி அவர்கள் பக்குவப்பட்டதின் பிரதிபலிப்பு தான், அவர்கள் மீதம் எடுத்த அப்பத்தை தல்மனூத்தாவிலேயே விட்டு விட்டு, இயேசு கிறிஸ்து மாத்திரம் போதும் என்று படவில் ஏறினது.
மத்தேயு இதனை குறித்துச் சொல்லும் பொழுது, சீஷர்கள் கடைசியாக இயேசு என்னும் அக்கரைக்கு சேர்ந்து விட்டதாக எழுதியுள்ளார் - அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள் - மத்தேயு 16:5
இதனை குறித்து மார்க் சொல்லும் பொழுது அவர்கள் படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் என்று எழுதியுள்ளார் - சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது - மாற்கு 8:8-14
இப்படி பக்குவப்பட்ட சீஷர்களிடம் இயேசு கிறிஸ்து சொன்னது தான், ஏரோதின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்பது - 15அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார். 16அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். 17இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? 18உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? 19நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். பன்னிரண்டு என்றார்கள். 20நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். 21அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார் - மாற்கு 8:15-21
ஏரோதின் உபதேசத்தில் இயேசு கிறிஸ்துவை மகிமை படுத்துகிற காரியங்கள் இல்லை, மாறாக உபதேசக்கிற ஏரோதை புகழ்கிற காரியங்கள் தான் இருந்தது, விளைவு பரிதாபம் தான் - 21குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். 22அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். 23அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான் - அப்போஸ்தலர் 12:21-23
இப்படி ஏரோதின் உபதேசத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று சொல்லும் பொழுது, ஏரோது போன்றவர்களின் உபதேசத்தைக் கேட்கும் பொழுது நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது மாத்திரம் இல்லாமல், நாம் ஏரோதை போல் மாறி விடக்கூடாது என்கிற கட்டளையும் அடங்கி இருக்கிறது.