He can do only what He sees His Father doing
Translation in progress from www.parisurthar.com
பிதா எப்பொழுதும் என்னுடனே கூட இருக்கிறார் என்று சொன்ன இயேசு கிறிஸ்து, தான் செய்ய வேண்டிய காரியங்களையும் பிதா செய்துக் காட்டுவதாக சொன்னதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார் - யோவான் 5:19
இதை லூக்கா தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு விளக்கியுள்ளார், எப்படியெனில் இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியத்தின் துவக்கத்தில் கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டு அதில் ஒன்றில் ஏறி ஜனங்களுக்குப் போதகம்பண்ணினாராம், அப்படியென்றால் ஏன் அங்கு இரண்டு படவு தேவைப்பட்டது, ஏனென்றால் பிதாவாகிய தேவன் குமாரன் என்ன செய்ய வேண்டும் என்பதை செய்து காட்ட தானே இன்னொரு படவு தேவைப்பட்டது - 1.பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். 2.அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். 3.அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார் - லூக்கா 5:1-3
இப்படி ஊழியத்தின் துவக்கத்தில் மாத்திரம் அல்ல, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையை நோக்கி பயணம் செய்த வரை, பிதாவாகிய தேவன், குமாரன் செய்ய வேண்டிய காரியங்களை செய்து காட்டினார், அதனால் தான் இயேசு கிறிஸ்து எருசலேமுக்கு வந்த பொழுது சீஷர்கள் கழுதையையும் அதின் குட்டியையும் கொண்டு வந்தார்கள் - 1.அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷரில் இரண்டுபேரை நோக்கி: 2.உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். 3.ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். 4.இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று, 5.தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 6.சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, 7.கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள் - மத்தேயு 21:1-7
இப்படி சீஷர்கள், கழுதையையும் அதின் குட்டியையும் கொண்டு வந்து அதின் மேல் தங்கள் வஸ்திரங்களைப் விரித்த பொழுது, இயேசு கிறிஸ்து கழுதையின் குட்டியின் மேல் ஏறிப்போனார் என்றால், ஏதற்காக சீஷர்கள் கழுதையையும் கொண்டு வந்தார்கள்? ஏனென்றால் பிதாவாகிய தேவன் குமாரன் என்ன செய்ய வேண்டிய காரியத்தை செய்து காட்ட தானே - 1.அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: 2.உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள். 3.ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். 4.அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள். 5.அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள். 6.இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள். 7.அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார் - மாற்கு 11:1-7
இப்படி பிதாவாகிய தேவன் ஏற்படுத்தின இரட்சிப்பு தான் இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் பாடுகளினால் நமக்கு கிடைத்த நித்திய ஜீவன்.