When the disciples reached the other side
Translation in progress from www.parisurthar.com

தன் சீஷர்களை தேவஞானத்தில் பக்குவப்படுத்தி இருந்த கர்த்தர் கேட்ட இந்த கேள்விகள், தல்மனூத்தாவிலிருந்து பெத்சாயிதாவுக்கு சென்ற படவு பயணத்தின் போது கேட்டது என்பதை தெளிவாக அறிந்துக் கொள்ளலாம் - 10உடனே அவர் தம்முடைய சீஷரோடேகூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார். 11அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 12அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி 13அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார். 14சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது  - மாற்கு 8:10-14

15அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார். 16அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். 17இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: (#1)உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? (#2)இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? (#3)இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? 18(#4)உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? (#5)காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? (#6)நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? 19(#7)நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். பன்னிரண்டு என்றார்கள். 20(#8)நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். 21(#9)அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். 22பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார் - மாற்கு 8:15-22a

ஆனால் மத்தேயு தன் புஸ்தகத்தில், இயேசு கிறிஸ்து அக்கரைக்கு சேர்ந்தபின்பு தன் சீஷர்களிடம் இந்த கேள்விகளை கேட்டார் என்று குறிப்பிட்டிருக்க காரணம் என்ன? - 5அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள். 6இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார். 7நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். 8இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன? 9இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்; 10ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா? 11பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். 12அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள் - மத்தேயு 16:5-12


ஊழியத்தின் ஆரம்ப நாட்களில் இயேசு கிறிஸ்து தன் சீஷர்களிடம் அக்கரைக்குப் போக வேண்டும் என்று சொன்னதை பல இடங்களில் பார்க்கலாம், அது சீஷர்கள் இவ்வுலக காரியங்களை விட்டு விட்டு முற்றிலும் தன்னையே சார்ந்திருக்க வேண்டும், அதாவது பரலோகத்தின் பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்று அழைத்த அழைப்பாகவே இருந்தது - பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார் - மத்தேயு 8:18 & அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார் - மாற்கு 4:35 & இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார் - மத்தேயு 14:22


இதனை கற்று கொள்ள சீஷர்களுக்கு, சில அனுபவங்கள் தேவைப்பட்டது, ஆரம்பத்தில் மீதியிருந்த அப்பத்தை 12 கூடை நிறைய எடுத்த சீஷர்கள், அடுத்த முறை 7 கூடை தான் எடுத்தார்கள், கடைசியாக அந்த மீதமெடுத்த அப்பத்தையும்(7 கூடைகளையும்) தல்மனூத்தாவிலேயே விட்டு விட்டு, ஜீவஅப்பமாகிய இயேசு கிறிஸ்து மாத்திரம் போதும் என்று பயணம் செய்தார்கள், இப்படி உலக அப்பங்களை(காரியங்களை) உதறி விட்டு, இயேசு கிறிஸ்து மாத்திரம் போதும் என்று முடிவெடுத்த சீஷர்களை குறித்துச் சொல்லும் பொழுது, அவர்கள் "படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது" என்று மார்க் எழுதியுள்ளார் - சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள் (மூலபாஷையில், உதறி விட்டு போனார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது); படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது - மாற்கு 8:8-14


இப்படி இயேசு கிறிஸ்துவின் மீதான அன்பிலும் விசுவாசத்தில் தேறினவர்களாய், இந்த உலக அப்பத்தை உதறி விட்டு வந்த சீஷர்களை குறித்து மத்தேயு சொல்லும் பொழுது, சீஷர்கள் தல்மனூத்தாவிலிருந்து பெத்சாயிதாவுக்கு சென்ற படவு பயணத்தில் இருந்தாலும், இயேசு கிறிஸ்து என்னும் அக்கரைக்கு சேர்ந்து விட்டதாக எழுதியுள்ளார் - 5அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள். 6இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார் - மத்தேயு 16:5-6