They divide My garments among them
Translation in progress from www.parisurthar.com

இயேசு கிறிஸ்து "உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே" என்று போதித்த பொழுது, அது கர்த்தரிடம் நிறைவேறப் போகிற ஒரு காரியம் என்பதை சீஷர்கள் உணராமல் இருந்தார்கள் - உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே - லூக்கா 6:29


இதனை குறித்து சங்கீதக்காரனும் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான், இந்த தீர்க்கதரிசத்தில் கர்த்தரின் வஸ்திரம் பிரிக்க படக்கூடியதாகவும், ஆனால் அங்கியோ ஒரே பாகமாகவும் பிரிக்க படக்கூடாததாகவும் இருக்கும் என்கிற இரகசியத்தையும் சங்கீதக்காரன் சொல்லியிருந்தார்  - என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள் - சங்கீதம் 22:18


தீர்க்கதரிசனத்தில் சொன்னபடியே, இயேசு கிறிஸ்துவின் வஸ்திரம் நான்கு பாகமாக பிரிக்ககூடியதாகவும், ஆனால் அங்கியோ தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்ததாம் - 23.போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது. 24.அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள் - யோவான் 19:23-24