In Your Name
Translation in progress from www.parisurthar.com

ஆரம்ப நாட்களில் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள், இயேசு கிறிஸ்து தான் மெய்யான தெய்வம் என்பதை அறியாமல் இருந்த பொழுது,  பதவியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் மேல் ஒரு ஈர்ப்பு இருக்க தான் செய்தது, அதனால் தான் தங்களுடைய ஊழியத்தை முடித்து வந்த சீஷர்கள், கர்த்தரை யோவான்ஸ்நானன் என்று ஏரோது சொன்னதை குறித்துச் சொல்லும் பொழுது, "ஏரோது ராஜா" என்று சொன்னார்கள் - 7அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து, 8வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டு போகவும்; 9பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார். 10பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால், அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள். 11எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். 12அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து; 13அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச் சொஸ்தமாக்கினார்கள். 14அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோது ராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 15சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள். 16ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான் - மாற்கு 6:7-16

 
இதனை சொன்ன சீஷர்களுக்கு கர்த்தர் பதில் ஒன்றும் சொல்லாமல், பின் சொல்லப்பட்ட அற்புதங்களினாலும், உபதேசத்தினாலும் தன் கர்த்தத்துவதை(தான் தேவன் என்பதை) வெளிப்படுத்தினார்.


இப்படி தன் சீஷர்களை பக்குவப்படுத்தின பின்பு, கர்த்தர் தன் சீஷர்களிடம் கேட்ட கேள்வி தான் "ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?" என்பது, இந்த முறை பதில் சொன்ன சீஷர்கள், "ஏரோது ராஜா உம்மை யோவான்ஸ்நானன்" என்று சொல்லுகிறான், என்பதற்கு பதிலாக "சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்று சொல்லுகிறார்கள்" என்று பதில் சொன்னார்கள், இப்படியாக கர்த்தரின் மகத்துவத்தை அறிந்த சீஷர்களுக்கு இந்த உலக மேன்மை எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது - 27பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்புச் செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 28அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 29அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான். 30அப்பொழுது, தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்- மாற்கு 8:27-30

அதனால் கர்த்தரை அறிந்த நாம், பதவியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் மேல் நோக்கமாய் இல்லாமல், கர்த்தரையே அண்டிக் கொள்வோம், நமது சிந்தையும் நாவும் கர்த்தரையே உயர்த்துவதாய் இருக்கட்டும்.