[Acted as if] He intended to pass by them
Translation in progress from www.parisurthar.com
ஏன் இயேசு கிறிஸ்து சீஷர்கள் தத்தளித்துக் கொண்டிருந்த படகை "கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்" என்றும், எம்மாவு கிராமம் வரை சென்று "அப்புறம் போகிறவர்போலக் காண்பித்தார்" என்றும் சொல்லப்பட்டுள்ளது?
மணவாளன் மற்றும் மணவாட்டி
திருமணம் நிச்சியம் செய்யபட்ட ஆணும் பெண்ணும் தனது திருமணத்திற்கு காத்திருக்கும் காலத்தில் அவ்ரகளுக்கு கொடுக்கப்படும் பெயர் தான் மணவாளன்(மணமகன்) மற்றும் மணவாட்டி(மணப்பெண்) என்பதாகும்.
இந்த மணவாளன் மற்றும் மணவாட்டியின் மத்தியில் இருந்த அன்பு ஒரு பரிசுத்தம் நிறைந்ததாகவே இருந்தது, அதனால் தான் இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்லும் பொழுது, ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை மணவாளன் என்றே குறிப்பிட்டுள்ளார் - வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார் - ஏசாயா 62:5
யாக்கோபு ஒரு மணவாளனாக ராகேலுக்கு காத்திருந்ததை குறித்து சொல்லும் பொழுது, காத்திருந்த ஏழு வருடங்கள் சிலநாட்கள் போல தோன்றினது என்று சொல்லி மணவாளனாக இருந்த நாட்களின் மகத்துவத்தை குறித்து வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது - அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான்; அவள்பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது - ஆதியாகமம் 29:20
இயேசு கிறிஸ்துவும் தன்னை மணவாளன் என்றும் நாம் புத்தியுள்ள கன்னிகையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை சொன்னதை பார்க்கலாம் - அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும் - மத்தேயு 25 :1
மணவாட்டியின் பாஷை
"கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்" என்ற வேத வசனத்தை தியானிக்கும் நாம், முதலாவதாக மணவாட்டியின் பாஷை என்று ஒன்று இருந்ததை அறிந்து கொள்ள வேண்டும், காரணம் மற்றவர்களின் பேச்சை காட்டிலும் மணவாட்டியின் பேச்சு முச்சிலும் வேறுபட்டதாக இருக்கும்.
மணவாளன் மணவாட்டியை பார்ப்பது, அதாவது திருமணத்திற்கு முன்பு மணமகன் மணப்பெண்ணை பார்ப்பது சமூகம் ஏற்று கொள்ளாத ஒரு காரியம் ஆகும், ஆனால் அன்பின் நிமித்தமாக மணவாளன் மணவாட்டியை பார்க்க வேண்டும் என்றால் வேறு ஒரு காரணம் சொல்லி கொண்டு தான் வர வேண்டும்.
அப்பொழுது எல்லோரும் மணவாளனை பார்த்ததை சொல்லும் பொழுது "அவர் கடந்து போகும் பொழுது பார்த்தோம்" என்று சொல்லுவார்கள், ஆனால் மணவாட்டியோ "கடந்து போகிறவர்போல் என்னை பார்க்க வந்தார்", அதாவது என்னை பார்ப்பதற்காக மணவாளனை இந்த வழியாக சென்றார் என்று சொல்லுவதை தான் மணவாட்டியின் பாஷை என்று சொல்லுகிறோம், அது மணவாட்டிக்கே உரியது.
மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு
ஆரம்ப நாட்களில் கர்த்தரோடு ஊழியத்துக்கு சென்ற சீஷர்கள், ஊழியம் முடிந்தபின்பு கர்த்தரை கரையிலேயே விட்டு விட்டு தாங்கள் மட்டும் படவிலே பயணம் மேற்கொண்டார்கள், ஒருவேளை தாங்கள் மீதம் எடுத்த அந்த 12 கூடை அப்பமும் மீனும் அவர்களுக்கு பெரிய ஆறுதலை கொடுத்து இருக்கும், அதனை விற்று கொஞ்ச நாள் இந்த உலக பாடுகளில் இருந்து விடுபடலாம் என்றோ அல்லது தம் பழைய நண்பர்களுடன் சேர்ந்து சில நாள் இந்த உலகத்தை அனுபவிக்கலாம் என்றோ எண்ணியிருப்பார்கள் - அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார். சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார் - மாற்கு 6:41-47
ஆனால் அவர்கள் நினைத்தது ஒன்றுமே நடக்கவில்லை, காரணம் காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியால் இரவின் நாலாம் ஜாமம் வரைக்கும் கடலில் தத்தளித்தார்களாம், நாலாம் ஜாமம் என்றால் விடியற்காலை 3 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரம் ஆகும், அப்படி சீஷர்கள் எறக்குறைய 9 மணி நேரமாக எதிர்க்காற்றோடு போராடிக்கொண்டிருந்தார்கள் என்றால் நிச்சியமாகவே அவர்களிடம் இருந்த 12 கூடை அப்பமும் மீனும் கடலின் அலைகளினால் தண்ணீர் பட்டு பிரயோஜனம் அற்றதாக போயிருந்தியிருக்கும், அந்த நேரத்தில் தான் கர்த்தர் அவர்களிடம் வந்தார் - அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார். அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள். அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி, அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள் - மாற்கு 6:48-51
இயேசு கிறிஸ்துவால் நேராக அந்த படகின் மத்தியிலேயே வந்து காட்சி கொடுத்திருக்க முடியும், பின்பு ஏன் அவர் சீஷர்கள் இருந்த படகை கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்? ஏன் என்றால் மணவாட்டியாக இருந்த நம்மை கர்த்தர் தேடி வந்ததை, அதாவது மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை அறிவுறுத்துவதற்காக "கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்" என்று சொல்லப்பட்டுள்ளது.
மரித்து உயிர்த்தெழுந்த மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு
இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்த நாட்களில் மாத்திரம் இல்லாமல், மரித்து உயிர்த்தெழுந்த பின்பும் ஒரு அன்பின் அடையாளமாக, நேசம் நிறைந்த மணவாளனாக இருப்பதை தான் மரித்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து "அப்புறம் போகிறவர்போலக் காண்பித்தார்" என்றும் சொல்லப்பட்டுள்ளது - அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர்போலக் காண்பித்தார். அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார் - லூக்கா 24:25-29