Importance of Baptism
Translation in progress from www.parisurthar.com
யோவான்ஸ்நானன் காலமுதல்
வேதாகமத்தில் ஒவ்வொருவரும் ஒரு தனிசிறப்புள்ள பாத்திரங்களாக பயன்படுத்தப்பட்டதை பார்க்கிறோம், உதாரணத்திற்கு ஏனோஸ், நோவா, ஆபிரகாமை எடுத்துக் கொள்ளலாமே, இதில் ஏனோஸ் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளவதற்கு ஒரு அடையாளமாக இருக்கிறார் - ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள் - ஆதியாகமம் 4:26
நோவா உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கிறார் - இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார் - ஆதியாகமம் 9:11
ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பனாகவும், விசுவாசத்திற்க்கு ஒரு அடையாளமாகவும் இருக்கிறார் - அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார் - ஆதியாகமம் 15:6
இப்படி ஏராளமான நபர்கள் வேதாகமத்தில் இருக்கும் பொழுது, இயேசு கிறிஸ்து யோவானை குறித்து இந்த இடத்தில் சொல்லக்காரணம் என்ன? நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள் - லூக்கா 16:16
ஏனென்றால் கிறிஸ்தவ ஜீவியத்தின் துவக்கமாக இருக்கிற ஞானஸ்நானத்தை கொடுக்க ஆரம்பித்தது இந்த யோவான்ஸ்நானகனே, இதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்தவே இயேசு கிறிஸ்து யோவான்ஸ்நானனை மேற்கோள் காட்டி பேசினதை பார்க்க முடிகிறது.
அது மாத்திரம் இல்லாமல் இயேசு கிறிஸ்து யோவானை, யோவான்ஸ்நானன் என்று அழைத்து ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை விளக்கினத்தையும் இன்னொரு இடத்தில் பார்க்க முடிகிறது - யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள் - மத்தேயு 11:12
ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக
வேதாகமத்தில் யோவான்ஸ்நானன் ஞானஸ்நானத்தை கொடுக்க ஆரம்பித்திருந்தாலும், அது ஒரு மாதிரியேயன்றி வேறொன்றும் இல்லை, நாம் இயேசு கிறிஸ்துன் நாமத்தினால் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் - 1.அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: 2.நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். 3.அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். 4.அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். 5.அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள் - அப்போஸ்தலர் 19:1-5
இப்படி மாதிரியாய் இருந்த யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை உதறினவர்களுக்கே கேடுண்டாகும் என்றால், சிலுவையில் நமக்காக மரித்த இயேசு கிறிஸ்துவின் ஞானஸ்நானத்தை உதறுவது எவ்வளவு ஆபத்தானது - 29.யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். 30.பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள் - லூக்கா 7:29-30
So be violent for Baptism covenant to reserve your spot in heaven.
Bible talks about many key characters, and everyone reflected their unique spiritual gift, Then why Jesus Christ said "From the days of John the Baptist" when he preached the Gospel.
Enos: Calling upon the name of the Lord - Genesis 4:26
Noah: Rainbow covenant - Genesis 9:8-17
Abraham: They must be circumcised - Genesis 17:1-14
Moses: Laws - Deuteronomy 4:44
Aaron: Priesthood - Leviticus 8
John the Baptist: Baptism
Yes, Jesus Christ would have said from the Day of Abraham or From the of Moses, but to emphasize the importance of the Baptism, our Lord Jesus Christ mentioned from the days of John the Baptist - The Law and the Prophets were until John; since then the good news of the kingdom of God is preached, and everyone forces his way into it - Luke 16:16
And John is the only person Jesus Christ called by mentioning his profession "John the Baptist" to emphasize the importance of the Baptism - From the days of John the Baptist until now the kingdom of heaven has suffered violence, and the violent take it by force - Matthew 11:12
ஞானஸ்நானங் கொடுப்பவர்களுக்கான வேத ஆலோசனை
கொரிந்தியருக்கு எழுதின புஸ்தகத்தில், பவுல் தன்னுடைய ஞானஸ்நான ஊழியத்தை குறித்து சில காரியங்களை சொல்லியிருந்தார், அதில் குறிப்பாக "உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்" என்றும் "இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங் கொடுத்தேனோ இல்லையோ அறியேன்" என்று சொன்ன காரியம் வேதாகமத்தில் இடம் பெற்றிருக்க காரணம் என்ன? - 13.கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்? 14.என் நாமத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு, 15.நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். 16.ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங் கொடுத்தேனோ இல்லையோ அறியேன். 17.ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார் - I கொரிந்தியர் 1:13-17
ஏனென்றால், ஒரு சபை ஊழியர் என் சபை மக்களுக்கு நான் தான் ஞானஸ்நானம் கொடுப்பேன் என்று அடம் பிடிக்கும் பொழுது, அது நாளடைவில் "நான் கட்டின சபை அல்லவா" என்று மனமேட்டிமை அடைய செய்கிற காரியமாக அமைந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை, முடிவு பரிதாபம் தான் - 29.பன்னிரண்டு மாதம் சென்றபின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது: 30.இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். 31.இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று - தானியேல் 4:29-31
இதில் இருந்து தப்பித்துக் கொள்ளத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் என்று சொல்லுகிறார், அதனால் நம் சபை மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க, நாம் சமாதானம் ஆக வேண்டிய ஒரு தேவ ஊழியரை அழைக்கலாமே?
இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள்
இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுக்கு பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்க கட்டளையிட்டிருந்தார், அதனால் பல இடங்களில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானங்கொடுப்பதை பார்க்கிறோம் - 19.ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20.நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென் - மத்தேயு 28:19-20
ஆனால் அப்போஸ்தலனாகிய பேதுரு இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட காரணம் என்ன? ஏனென்றால் நாம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கும் பொழுது, திரியேக தேவனாகிய பிதா குமாரன் பரிசுத்த ஆவியாகிய மூவருமே நமக்காக சிலுவையில் பாடு பட்டார்கள் என்று அறிக்கையிடுகிறோம் - 47.அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, 48.கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான் - அப்போஸ்தலர் 10:47-48a
இல்லாவிடில், பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரை ஏற்றுக் கொள்ளுகிறோம், ஆனால் குமாரன் மாத்திரமே சிலுவையில் பாடு பட்டார் என்று சொல்லுகிறவர்களாய் இருப்போம், அதனால் தான் கர்த்தரின் மறுரூப மகிமையை கண்ட பேதுரு, சபைக்கு கல்லாக கர்த்தரால் நியமிக்கப்பட்ட பேதுரு இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்க கட்டளையிட்டார், இதுவே இயேசு கிறிஸ்துவின் திரித்துவத்தின் பரம ரகசியமாகவும் இருக்கிறது - 38.பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 39.வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; 40.இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான் - அப்போஸ்தலர் 2:38-40