He Glorified God
Translation in progress from www.parisurthar.com
பல சிலுவை மரணங்களை கண்ட நூற்றுக்கு அதிபதி, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட தன்னை தான் ஒப்புக் கொடுத்ததையும், மகா சத்தமாய்க் கூப்பிட்டு தன் ஜீவனை விட்டதையும் கண்ட பொழுது, மெய்யாகவே இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிட்டான் என்று மத்தேயு மற்றும் மாற்கு புஸ்தகத்தில் பார்க்கிறோம் - 50.இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். 51.அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. 52.கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. 53.அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். 54.நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள் - மத்தேயு 27:50-54
37.இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். 38.அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. 39.அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான் - மாற்கு 15:37-39
மேலும் இயேசு கிறிஸ்து தான் தேவன் என்பதை அறிவுறுத்த, லூக்கா இந்த சம்பவத்தை குறித்துச் சொல்லும் பொழுது நூற்றுக்கு அதிபதி இயேசுவை மகிமைப்படுத்தினான் என்பதற்கு பதிலாக தேவனை மகிமைப்படுத்தினான் என்று குறிப்பிட்டுள்ளார் - 46.இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். 47.நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான் - லூக்கா 23:46-47