He did not want anyone to know it
Translation in progress from www.parisurthar.com
இயேசு கிறிஸ்து தன் ஊழியத்தின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நமக்காக தான் அடைய போகிற பாடுகளையும், தன்னுடைய சிலுவை மரணத்தையும் குறித்துச் சொன்னதை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம்.
20.அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். 21.அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். 22.அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். 23.அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார் - மத்தேயு 16:20-21
19.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். 20.அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். 21.அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். 22.அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள் - யோவான் 2:19-22
21.இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார். 22.அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார். 23.அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள் - மத்தேயு 17:21-23
17.இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து: 18.இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, 19.அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார் - மத்தேயு 20:17-19
33.வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான். 34.கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான். 35.தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். 36.பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள். 37.கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். 38.தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; 39.அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள். 40.அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார். 41.அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள் - மத்தேயு 21:33-41
1.இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி: 2.இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார் - மத்தேயு 26:1-2
10.இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். 11.தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள். நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். 12.இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம்பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது - மத்தேயு 26:10-12
ஆனால் சீஷர்களோ கிறிஸ்து படப்போகிற பாடுகளையும், அதின் நோக்கத்தையும் அறிந்துக் கொள்ளவே இல்லை, ஏன் சீஷர்களால் அதை அறிந்துக் கொள்ள முடியவில்லை? ஏனென்றால் தேவனாகிய இயேசு கிறிஸ்து அதை ஒருவரும் அறியாதிருக்கவேண்டுமென்று விரும்பினாராம், இது வேதாகமத்தில் சொல்லப்பட்ட விதத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
அதை ஒருவரும் அறியாதிருக்கவேண்டுமென்று விரும்பினார்
இதே சம்பவத்தை குறித்து லூக்கா சொல்லும்பொழுது, கர்த்தர் சொன்ன காரியங்கள் சீஷர்களுக்கு மறைபொருளாயிருந்ததாம் - 43.அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: 44.நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார். 45.அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது, அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள் - லூக்கா 9:43-45
ஏன் சீஷர்களுக்கு தோன்றாமல் மறைபொருளாயிருந்தது என்றால், கர்த்தர் தான் கலிலேயாவைக் கடந்துபோவதை(சிலுவை பாடு மரணத்தை) யாரும் அறியாதிருக்கவேண்டுமென்று விரும்பினாராம் - 29.அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார். 30.பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அதை ஒருவரும் அறியாதிருக்கவேண்டுமென்று விரும்பினார். 31.ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். 32.அவர்களோ, அந்த வார்த்தையை அறிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள் - மாற்கு 9:29-32
கலிலேயாவிலிருந்த காலத்தில்
ஆனால் இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த பிறகு தான், கிறிஸ்துவின் பாடு மரணத்திற்கான காரணங்கள் விளக்கி காட்டப்பட்டது, இதில் கலிலேயா என்பது கர்த்தரின் சிலுவை பாடுகளை குறிப்பதாகவே இருந்தது - 5.அந்த ஸ்திரீகள் பயப்பட்டு தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? 6.அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். 7.மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். 8.அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, 9.கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள் - லூக்கா 24:5-9
இப்படி கர்த்தர் விரும்பினால் தான் நம்மால் காரியத்தை அறிந்துக்கொள்ள முடியும் என்றால், அவர் சர்வவல்லமையுள்ள தேவன் என்பதில் சந்தேகமே இல்லை அல்லவா!
கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?
இப்படி கலிலேயா என்பது கிறிஸ்துவின் பாடுகளை குறிப்பதை அறியாததினால் தான் கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? என்கிற கேள்விகள் எழும்பின - 40.ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். 41.வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? 42.தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள். 43.இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று - யோவான் 7:40-43
Many times Jesus Christ spoke about his Crucifixion, But none of them could understand it - Let these words sink into your ears: The Son of Man is about to be delivered into the hands of men. But they (Disciples) did not understand this saying, and it was concealed from them, so that they might not perceive it. And they were afraid to ask him about this saying - Luke 9:44-45
Mark is telling the reason why the Disciples could not understand it, - Then they departed from there and passed through Galilee, and He did not want anyone to know it. For He taught His disciples and said to them, “The Son of Man is being betrayed into the hands of men, and they will kill Him. And after He is killed, He will rise the third day.” But they did not understand this saying, and were afraid to ask Him - Mark 9:30-32
Mark refers crucifixion of Jesus Christ as "passing through Galilee", and Jesus Christ did not want anyone to know about it, which clearly tells that Jesus Christ is God who knows and control everything including our thoughts and understanding. And after the resurrection, the Spirit of God opened their mind to understand the teaching of Jesus Christ.
According to Gospel of Luke
In their fright the women bowed down with their faces to the ground, but the men said to them, “Why do you look for the living among the dead? He is not here; he has risen! Remember how he told you, while he was still with you in Galilee: ‘The Son of Man must be delivered over to the hands of sinners, be crucified and on the third day be raised again.’ ” Then they remembered his words. When they came back from the tomb, they told all these things to the Eleven and to all the others - Luke 24:5-9
Then he opened their minds to understand the Scriptures, and said to them, “Thus it is written, that the Christ should suffer and on the third day rise from the dead, and that repentance for the forgiveness of sins should be proclaimed in his name to all nations, beginning from Jerusalem. You are witnesses of these things - Luke 24:45-48
According to Gospel of John
Jesus answered them, “Destroy this temple, and in three days I will raise it up.” The Jews then said, “It has taken forty-six years to build this temple, and will you raise it up in three days?” But he was speaking about the temple of his body. When therefore he was raised from the dead, his disciples remembered that he had said this, and they believed the Scripture and the word that Jesus had spoken - John 2:19-22
And Jesus found a young donkey and sat on it, just as it is written, “Fear not, daughter of Zion; behold, your king is coming, sitting on a donkey's colt!” His disciples did not understand these things at first, but when Jesus was glorified, then they remembered that these things had been written about him and had been done to him - John 12:14-16
According to Gospel of Mark
Afterward he appeared to the eleven themselves as they were reclining at table, and he rebuked them for their unbelief and hardness of heart, because they had not believed those who saw him after he had risen - Mark 16:14