I have compassion
Translation in progress from www.parisurthar.com

இயேசு கிறிஸ்துவிடம் ஒருமுறை சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு வந்து அவரின் பாதத்திலே வைத்தார்கள், அவர்கள் மேல் மனதுருகின தேவன் அவர்கள் எல்லோரையும் சொஸ்தப்படுத்தினார் - 29.இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார். 30.அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். 31.ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்- மத்தேயு 15:29-31



அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டு தேவனை மகிமை படுத்திக்கொண்டிருந்த பொழுது, இயேசு கிறிஸ்து ஜனங்களுக்காகப் பரிதாபப்பட்டதாக வேதாகமம் சொல்லுகிறது, காரணம் துதிக்குப் பாத்திரராகிய இயேசு கிறிஸ்து தான் தேவன் என்பதை மக்கள் அறியாமல் இருந்ததினால் தான் - பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்து போவார்களே என்றார் - மத்தேயு 15:32


அது மாத்திரம் இல்லாமல், அங்கிருந்த எல்லோருக்கும் தாங்கள் அழைத்துக்கொண்டு வந்த சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய எல்லோரும் சுகம் பெற்றது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது, இப்படி எல்லோரும் இந்த உலக ஆசிர்வாதத்தினால் சந்தோஷமாய் இருக்கும் பொழுது, இயேசு கிறிஸ்துவோ ஜனங்கள் தன்னிடம் இருந்து கிருபையையும் பரிசுத்த ஆவியானவரையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஞானம் இல்லாமல் இருப்பதை குறித்துப் பரிதாபப்படுகிறவராய் இருந்தார், அதனால் தான் சிலுவையில் தான் செய்ய போகிற காரியத்தை அதாவது ஜீவ அப்பமாகிய தான் நமக்காக பிட்க பட போகிறதை செய்து காண்பித்தார் - 33.அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள். 34.அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள். 35.அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, 36.அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். 37.எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்கள். 38.ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம் பேராயிருந்தார்கள் - மத்தேயு 15:32-38


அது மாத்திரம் இல்லாமல், "ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன்" என்கிற வார்த்தையை, அந்த அந்நிய தெய்வமும் பயன்படுத்தினது கிடையாது, மனித வரலாற்றில் எந்த மனிதனும் உபயோகப்படுத்தினதும் கிடையாது, இது மெய்தெய்வமாகிய இயேசு கிறிஸ்து அழிந்துகொண்டிருக்கிற மனிதகுல இரட்சிப்புக்காக சொன்ன வார்த்தையாகவே இன்றளவும் இருக்கிறது.