நகைச்சுவை பிரசங்கங்கள் பிரபலமாகி வருகிற இந்த காலத்தில், அதை கேட்போருக்கு இதில் என்ன தவறு என்பது போலத்தான் தான் தோன்றுகிறது, ஆனால் நகைச்சுவை பிரசங்கங்கள் சாத்தானின் நவீன தந்திரமாக இருக்கிறது, காரணம் பரியாசம் இல்லாமல் நகைச்சுவை பிரசங்கம் பண்ணமுடியாது என்பது தான் உண்மை, இதில் நகைச்சுவைக்காக ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு சமுதாயமோ பரியாசம் பண்ணப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது, இதை நன்றாய் கவனித்துப்பார்த்தாள் தான் உணர்ந்துக்கொள்ள முடியும், சில நேரங்களில் அது ஒரு வேதாகம பாத்திரமாகக்கூட இருந்து விடுகிறது.
முதலாவது பரியாசமானது, சுயஇச்சைகளின் படி நடப்பவர்கள், கிறிஸ்துவை மறுதலிப்பவர்கள், ஜென்மசுபாவத்தார், மற்றும் ஆவியில்லாதவர்களின் அடையாளமாகவே இருக்கிறது - 3.முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, 4.அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள் - II பேதுரு 3:3-4
18.கடைசிகாலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. 19.இவர்கள் பிரிந்து போகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே - யூதா 1:18-19
எந்த கூட்டத்திலாவது பரியாசம் அல்லது நகைச்சுவை பண்ணுகிற சமயத்தில் அற்புதமோ அல்லது இரட்சிப்புக்கேதுவான மந்திரும்புதலோ நடந்திருக்கிறதா?சிம்சோனின் கரத்தால் தேவன் யாரை அழித்துப்போட்டார்? பரியாசம் பண்ணுகிற கூட்டத்தை அல்லவா? - 27.அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 28.அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி, 29.சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு, 30.என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள் - நியாயாதிபதிகள் 16:27-30
ஆபிரகாமின் மூத்த குமாரனாகிய இஸ்மவேலின் தவறு என்ன? அவன் பரியாசம்பண்ணுகிறவரனாக இருந்த படியினால் அல்லவா இரட்சிப்பை இழந்தான் - 9.பின்பு எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு, 10.ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள் - ஆதியாகமம் 21:9-10
இப்படி பரியாசம் பண்ணினவனை வேதாகமம், மாம்சத்தின்படி பிறந்தவன், துன்பப்படுத்துகிறவன், அடிமையானவளின் மகன், இரட்சிப்பை இழந்து புறம்பே தள்ளப்பட்டவன் என்றல்லவா சொல்லுகிறது - 28.சகோதரரே நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். 29.ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது. 30.அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது. 31.இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம் - கலாத்தியர் 4:28-31
இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியத்தின் நாட்களில் இப்படி நகைக்கிற கூட்டத்தை துரத்திவிட்டப்பின்பு தானே அற்புதத்தை செய்தார், அதனால் நகைச்சுவை பிரசங்கம் தேவையா யோசித்துப் பாருங்கள் - 23.இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு: 24.விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள். 25.ஜனங்கள் வெளியே துரத்தப்பட்டபின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். 26.இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று - மத்தேயு 9:23-26