It is most holy
Translation in progress from www.parisurthar.com

நியாயபிரமானத்தில் பாவநிவாரணபலி குறித்துச் சொல்லும் பொழுது அது மகா பரிசுத்தமானது என்று சொல்லப்பட்டுள்ளது, எப்படி பாவநிவாரணபலி பரிசுத்தமாய் இருக்க முடியும்? அதுவும் மகா பரிசுத்தமானது என்று சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ளுவது? - நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது - லேவியராகமம் 6:25



உதாரணத்திற்கு, ஒரு கொலை குற்றவாளி தன் பாவத்தை ஒரு ஆட்டுக்கடாவின் மேல் சுமத்தினால், அந்த ஆட்டுக்கடா எப்படி பரிசுத்தமாருக்க முடியும், இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத காரியம் ஆச்சே - குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது - லேவியராகமம் 7:1



இது பரிசுத்த தேவனே, நமது பாவநிவாரணபலியாகவும் குற்றநிவாரணபலியாகவும் வந்தால் மாத்திரமே கூடும் - என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் - லேவியராகமம் 20:8


இதை தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்தார் - நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார் - I யோவான் 2:2