To give glory to God
Translation in progress from www.parisurthar.com
தன் வாழ்க்கையே இப்படி தான் முடியப்போகிறது என்றிருந்த பத்து குஷ்டரோகிகளை இயேசு கிறிஸ்து சுகப்படுத்தினதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 11.பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார். 12.அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: 13.இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். 14.அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள் - லூக்கா 17:11-14
ஆனால் இயேசு கிறிஸ்து தான் சுகமாக்க போகிற குஷ்டரோகிகளை ஆசாரியர்களிடம் அனுப்பிய காரணம் என்ன? இந்த சம்பவத்தில் பல உண்மைகள் இருந்தாலும், மிக எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய ஒரு காரியம் என்னவென்றால் திரும்பிவந்த ஒரே ஒரு குஷ்டரோகி இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் விழுந்து தேவனை மகிமைப்படுத்தி இயேசுவே தேவன் என்று வெளிப்படுத்தினது தான் - 15.அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, 16.அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். 17.அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? 18.தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, 19.அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார் - லூக்கா 17:15-19