You have seen him

Translation in progress from www.parisurthar.com

It was really an astonishing moment when Christ read the prophecy from the book of Isaiah - And he came to Nazareth, where he had been brought up. And as was his custom, he went to the synagogue on the Sabbath day, and he stood up to read. And the scroll of the prophet Isaiah was given to him. He unrolled the scroll and found the place where it was written, The Spirit of the Lord is upon me, because he has anointed me to proclaim good news to the poor. He has sent me(shaw-lakh) to proclaim liberty to the captives and recovering of sight to the blind, to set at liberty those who are oppressed, to proclaim the year of the Lord's favor. And he rolled up the scroll and gave it back to the attendant and sat down. And the eyes of all in the synagogue were fixed on him. And he began to say to them, Today this Scripture has been fulfilled in your hearing - Luke 4:16-21


And there was a water pool named after this promise (shaw-lakh) to remind the people that Christ will born to save us - The Spirit of the Lord God is upon me, because the Lord has anointed me to bring good news to the poor; he has sent me (shaw-lakh) to bind up the brokenhearted, to proclaim liberty to the captives,  and the opening of the prison to those who are bound; to proclaim the year of the Lord's favor, and the day of vengeance of our God; to comfort all who mourn; to grant to those who mourn in Zion, to give them a beautiful headdress instead of ashes, the oil of gladness instead of mourning, the garment of praise instead of a faint spirit; that they may be called oaks of righteousness, the planting of the Lord, that he may be glorified - Isaiah 61:1-3


Once Jesus Christ read the promise in the Temple, and now he sent the blind man to the pool of Siloam(shaw-lakh) so that the people could understand the Messiah, and the Blind man became a first person to Acknowledge in the Temple that Jesus Christ is our Savior - As he passed by, he saw a man blind from birth. And his disciples asked him, Rabbi, who sinned, this man or his parents, that he was born blind? Jesus answered, It was not that this man sinned, or his parents, but that the works of God might be displayed in him. We must work the works of him who sent me while it is day; night is coming, when no one can work. As long as I am in the world, I am the light of the world. Having said these things, he spit on the ground and made mud with the saliva. Then he anointed the man's eyes with the mud and said to him, Go, wash in the pool of Siloam, which means Sent (shaw-lakh). So he went and washed and came back seeing - John 9:1-7

எருசலேமில் பிறவிக்குருடனாகிய ஒருவன் இருந்தான், சீஷர்கள் அந்த பிறவிக்குருடனை குறித்து இவன் குருடனாய்ப் பிறந்தது இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள், ஒருவேளை அவன் பார்வையுள்ளவனாக இருந்து, அவனுடைய அங்க ஊனங்களை குறித்து யாராவது இப்படி பேசியிருந்தால் அவன் மிகுந்த கோபம் அடைந்து இருப்பான், ஆனால் அந்த குருடனுக்கோ ஒன்றும் செய்ய முடியாத பரிதாபமான சூழ்நிலை - 1.அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். 2.அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள் - யோவான் 9:1-2


அப்பொழுது இயேசு சொன்ன பதில், அந்த குருடன் தன் வாழ்க்கையில் கேட்ட முதல் ஆருதலான வார்த்தையாகவும், அவனுக்கு மிகுந்த நம்பிக்கை கொடுக்கும் வார்த்தையாகவும் இருந்தது - 3.இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான். 4.பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. 5.நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார் - யோவான் 9:3-5


அந்த பிறவிக்குருடனின் பெற்றோர் எவ்வளவோ செலவு செய்து பலவிதமான மருந்துகளை அவன் கண்களில் தடவி பார்த்திருப்பார்கள், அந்த பிறவிக்குருடனும் தன் வாழ்நாளில் பார்வை பெற எவ்வளவோ முயற்சி செய்து இருப்பான், பலர் இதனை பயன்படுத்தி அவனை ஏமாற்றியும் இருப்பார்கள், ஆனாலும் இயேசுவின் கனிவான பேற்றும் அவனுக்காக பரிந்து பேசின வார்த்தைகளும் அவனை தொட்டது, அதனால் இயேசு தன் கண்களில் தடவினது சாதாரண சேறு தான் என்று அறிந்தும் இயேசு சொன்ன சீலோவாம் குளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான், இயேசு கிறிஸ்து சொன்னதை செய்து பார்வை பெற்றவனாக திரும்பி வந்தான் -  6.இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: 7.நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான். 8.அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள். 9.சிலர்: அவன்தான் என்றார்கள். வேறு சிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான் - யோவான் 9:6-9


அவன் தனக்காக பரிந்து பேசி, தன் கண்களின்மேல் சேற்றை பூசி சீலோவாம் குளத்தில் கழுவ சொன்னது இயேசு என்பதை அறிந்து இருந்தான், ஆனால் இன்னும் அவன் இயேசுவை பார்க்க வில்லை. 10.அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள். 11.அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான். 12.அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான்- யோவான் 9:10-12



பரிசேயர் மற்றும் யூதர்கள் 


அது மட்டும் இல்லாமல், இயேசுவை தெய்வம் என்று ஏற்று கொள்ள தடுமாறி கொண்டிருந்த உலகத்தில், இயேசுவை கிறிஸ்து என்று அறிக்கை செய்கிறவனாகவும் இருந்தான் - 13.குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள். 14.இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைக் திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. 15.ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான். 16.அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று. 17.மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான் - யோவான் 9:13-17



இயேசுவை கிறிஸ்து என்று அறிக்கைபண்ணினால் ஜெபஆலயத்துக்குள் வர முடியாத கட்டுப்பாடு பண்ணி இருந்த காலம் அது, அந்த கட்டுப்பாட்டின் நிமித்தமாக அவனுடைய பெற்றோர்களும் இதை குறித்து பேச பயந்தார்கள்,  - 18.அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வையடைந்தவனுடைய தாய்தகப்பன்மாரை அழைப்பித்து, 19.அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள். 20.தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக: இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும். 21.இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள். 22.அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள். 23.அதினிமித்தம்: இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவன் தாய்தகப்பன்மார் சொன்னார்கள் - யோவான் 9:18-23

நிச்சியமாகவே அந்த பிறவிக்குருடனும் அவனுடைய பெற்றோர்களும் இஸ்ரவேலராக தான் இருந்திருக்க வேண்டும், அதிலும் பரிசேய பிரிவை சேர்ந்தவர்களாக இருந்திருக்க அதிக வாய்ப்புண்டு, ஆனால் இயேசு கிறிஸ்து அவர்கள் வாழ்க்கையில் வந்தவுடன் பரிசேயர்களுக்கும் மற்றும் யூதர்கள்களுக்கும் பிடிக்காதவர்களாய் மாறிவிட்டார்கள், அது தான் கிறிஸ்தவர்களின் உண்மையான அடையாளம்.



அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ


ஆனால் அந்த கட்டுபாடு குருடனாயிருந்தவனிடம் செயல்பட முடியவில்லை, அவன் இயேசுவை குறித்து தைரியமாக பேச ஆரம்பித்தான், மேலும் அவன் யூதர்களை பார்த்து "அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ" என்று கேட்ட கேள்வி, இயேசுவை காணாமலையே அவருடைய சீஷனாக மாறியிருந்ததை வெளிக்காட்டியது - 24.ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள். 25.அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான். 26.அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள். 27.அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற்போனீர்கள்; மறுபடியும் கேட்கவேண்டியதென்ன? அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான். 28.அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர். 29.மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள் - யோவான் 9:24-29


அது மட்டும் இல்லாமல் இயேசு பாவமற்ற ஒரு பரிசுத்தர் என்றும், அவர் நிச்சயமாக தேவனிடத்திலிருந்து தான் வந்து இருக்க வேண்டும் என்றும் வாதாடினான் - 30.அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம். 32.பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். 32.பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானதுமுதல் கேள்விப்பட்டதில்லையே. 33.அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். 34.அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள் - யோவான் 9:30-34



நீ அவரைக் கண்டிருக்கிறாய்


இப்படி அந்த பிறவிக்குருடன் இயேசுவின் வார்த்தைக்கு கீழ்படிந்து சீலோவாம் குளத்திலே கழுவி பார்வை பெற்றவனாக, இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொண்டவனாக, இயேசுவை எதிர்ப்பவர்கள் முன்னே தைரியமாக சாட்சி சொல்பவனாக, அது மட்டும் இல்லாமல் இயேசுவின் நிமித்தமாக புறம்பே தள்ள பட்டவனாகவும் இருந்தான், ஆனால் அவன் இதுவரை இயேசுவை பார்த்ததே கிடையாது, அப்படி தன்னை இதுவரை கண்டிராதவனிடம் இயேசு கிறிஸ்து சொன்னது தான் "நீ அவரைக் கண்டிருக்கிறாய்" என்பது - 35.அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார். 36.அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான். 37.இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார். 38.உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான் - யோவான் 9:35-38



கழுவு

அந்த பிறவிக்குருடனின் கண்கள் கழுவப்பட்டதற்கு காரணம் பார்வை அடைவதற்காக அல்ல, மாறாக பரம தேவனாகிய இயேசு கிறிஸ்துவை தரிசிப்பதற்காகவே, அந்தப் பிறவிக்குருடனின் கண்கள் இதுவரை எதையுமே கண்டது கிடையாது, ஆனாலும் அவனுடைய கண்களுக்கு ஒரு சுத்திகரிப்பு தேவைப்பட்டது நம் பரம தேவனாகிய இயேசு கிறிஸ்துவை தரிசிப்பதற்கு -  3.இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான். 4.பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. 5.நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். 6.இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: 7.நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான் - யோவான் 9:6-9



உமிழ்நீரினால் கர்த்தர் உண்டாக்கின சேரானது ஒரு பிறவி குருடனுக்கு தேவனை தரிசிக்கும் பாக்கியத்தை கொடுக்குமானால், நமக்காக கர்த்தர் சிந்தின பரிசுத்த ரத்தமும் பிட்கப்பட்ட கர்த்தரின் சரீரமும் நம்மை சுத்திகரித்து பரம தேவனாகிய அவரை  தரிசிக்கும் பாக்கியவான்களாக மாற்றும் என்பது அதிக நிச்சயம் அல்லவா - 12.வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.  அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால்,  நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!  -  எபிரெயர் 9:12-14


நான் கழுவினேன், காண்கிறேன்


கர்த்தர் தன்னுடைய கண்களில் பூசினது சேறு என்று அறிந்தும், அந்த குருடன் ஒரு அசைக்க முடியாத விசுவாசத்தோடு சென்று சீலோவாம் குளத்திலே கழுவி கர்த்தரை தரிசிக்கும் பாக்கியத்தை பெற்றான் - 13.குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள். 14.இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைக் திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. 15.ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான். 16.அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று. 17.மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான் - யோவான் 9:13-17



ஆனால் நமக்காக கர்த்தர் உமிழ்நீரையல்ல, மாறாக தன்னுடைய பரிசுத்த ரத்ததையே சிந்தியிருக்கிறார், தன்னுடைய பரிசுத்த சரீரத்தையே பிட்க கொடுத்திருக்கிறார், தை அறிந்த நாம் எவ்வளவாய் கர்த்தரை விசுவாசிக்க வேண்டும் - 22.அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். 23.பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள். 24.அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது - மாற்கு 14:22-24



காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும்


அப்பொழுது இயேசு கிறிஸ்து, இரண்டு இடங்களில் தன்னை குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களை விவரித்து காண்பித்தார் - 39.அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். 40.அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள். 41.இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார் - யோவான் 9:39-41


இயேசு கிறிஸ்து காணாதவர்கள் காணும்படியாக வெளிப்படுவார் என்று சொல்லப்பட்ட  தீர்க்கதரிசனம் - 3.தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். 4.மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். 5.அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். 6.அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும் - ஏசாயா 35:3-6


இயேசு கிறிஸ்து காண்கிறவர்கள் குருடராகும்படியாக வெளிப்படுவார் என்று சொல்லப்பட்ட  தீர்க்கதரிசனம் - 9.அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல். 10.இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார் - ஏசாயா 6:9-10