The plowers plowed upon my back
Translation in progress from www.parisurthar.com
எசாயா தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்லம் பொழுது, கர்த்தர் நமக்காக படப்போகிற ஒவ்வொரு பாடுகளை குறித்தும் தீர்க்கதரிசனமாக எழுதிருந்தார் - 6.அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7.கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன் - ஏசாயா 50:6-7
சங்கீதகாரனாகிய தாவீது இதை குறித்து சொல்லும் பொழுது, உழுத நிலம் எப்படி புரட்டிபோட்டது போல் இருக்கோமோ, அப்படியாக கர்த்தருடைய சரீரமும் தோல் தெரியாதபடி உழுத நிலம் போலிருந்தது என்று சொல்லியிருக்கிறார் - 1.என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள். 2.என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். 3.உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள் - சங்கீதம் 129:1-3
இந்த பாடுகள் எல்லாம் பட்டு தான் கர்த்தர் நம்மை ரட்சித்தார் - 15.அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். 16.அப்பொழுது, போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து, 17.சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி: 18.யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, 19.அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள் - மாற்கு 15:15-19