Hid himself from them
Translation in progress from www.parisurthar.com

நம்முடைய கண்களால் காணக்கூடாத தேவன், இயேசு கிறிஸ்துவாய், அதாவது தேவனுடைய தற்சுரூபமாய் இந்த பூமிக்கு வந்தார் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது - 15.அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். 16.ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. 17.அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது - கொலோசெயர் 1:15-17


இப்படி தேவனுடைய தற்சுரூபமாய் இந்த பூமிக்கு வந்த இயேசு கிறிஸ்துவை, நாம் மனதார ஏற்றுக் கொண்டு அவரை நேசிப்போமானால் அவர் நமக்கு தேவனாக வெளிப்படுவார், ஒருவேளை இந்த இயேசு கிறிஸ்துவை நாம் தெய்வமாக ஏற்றுக் கொள்ள மனதில்லாமல், சந்தேகம் கொள்வோமானால், அவர் நமக்கு ஒரு சாதாரண தீர்க்கதரிசி போலவோ, அல்லது ஒரு வரலாற்று நபர் போல தான் காட்சியளிப்பார் - 25.தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; 26.புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர் - சங்கீதம் 18:25-26


அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை


அதனால் தான், இயேசு கிறிஸ்து, தன்னை கண்டும் தன்னை தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் சொன்னது தான் "நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை" என்று சொன்னார் - 33.நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான். 34.நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். 35.அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். 36.யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது. 37.என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை - யோவான் 5:33-37


நீ அவரைக் கண்டிருக்கிறாய்


ஆனால், அதே சமயத்தில், பிறவிக்குருடனாயிருந்து, தன்னை ஒரு முறைக்கூட பார்க்காமல், தன்னை தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்தவனிடம், கர்த்தர், நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றும் சொன்னார் - 35.அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார். 36.அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான். 37.இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார். 38.உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான் - யோவான் 9:35-38