ஒருமுறை இயேசு கிறிஸ்துவிடம், பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் கொண்டுவரப்பட்டான், குருடும் ஊமையுமானவன் என்றால் அவன் காது கேட்காதவனாகவும் தான் இருந்திருக்க வேண்டும், இப்படி குருடும் ஊமையும் செவிடனுமாக இருந்தவனை இயேசு கிறிஸ்து சொஸ்தமாக்கின பொழுது, அங்கிருந்த வேதபாரகரும் பரிசேயரும் கர்த்தரை துதிப்பதற்கு பதிலாக, அவர் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறார் என்றார்களாம், வேறு சிலரோ அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று கேட்டார்களாம் - 14.பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். 15.அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். 16.வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள். 17.அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோம். 18.சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே. 19.நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். 20.நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. 21.ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடையபொருள் பத்திரப்பட்டிருக்கும். 22.அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான். 23.என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். 24.அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, 25.அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, 26.திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார். 27.அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். 28.அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார் - லூக்கா 11:14-28
யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி
இப்படி தன்னை குறித்து பேசினவர்களை, பொல்லாதவர்கள் என்றும், அடையாளத்தைத் தேடுகிறவர்கள் என்றும் சொன்ன கர்த்தர், அவர்களுக்கு ஒரு அடையாளத்தை மாத்திரம் கொடுக்கப் போவதாக சொன்னார், அது தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த அடையாளம், இப்படி கர்த்தர் அனுமதித்ததினால் தான், இன்று பலரும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், கர்த்தரின் உயிர்த்தெழுதலையும் கூட அறிந்தவர்களாக இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று ஏற்றுக் கொள்ளவும் முடிய வில்லை, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளவும் முடிய வில்லை, இதை தான் கர்த்தர் இவர்களுக்கு யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் கொடுக்கப்படுவதில்லை என்று சொன்னார் - ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை - லூக்கா 11:29
தேவாலயத்தின் அடையாளம்
அதுபோலவே, ஒருமுறை நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எருசலேம் தேவாலயத்திலிருக்கையில், அங்கிருந்த யூதர்கள் தேவாலயத்திற்குரியவர் அங்கு வந்ததற்காக ஆர்ப்பரிக்க வேண்டியவர்கள், அதற்கு மாறாக கர்த்தரிடம் அவர் தேவனிடத்தில் இருந்தது வந்தவர் என்பதற்கான அடையாளத்தை கேட்டார்கள், அவர்களுக்கு கர்த்தர் ஒரு அடையாளத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ள அனுமதித்தார், அது தான் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த அடையாளம், அதே சமயத்தில் இப்படி அடையாளம் கேட்டவர்களை நம்பி கர்த்தர் இணங்கவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது - 18.அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள். 19.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். 20.அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். 21.அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். 22.அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். 23.பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடையநாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். 24.அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. 25.மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை - யோவான் 2:18-25
சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார், யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்
இப்படி தன்னுடைய சிலுவை பாடுகளை குறித்துச் சொன்ன கர்த்தர், வேறு இரண்டு அடையாளங்களை குறித்து சொன்னது தான், சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார், யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்பது, இது நம்மை இழுத்துக் கொள்ளுகிற பிதாவையும், நம்மை அபிஷேகிக்கிற பரிசுத்த ஆவியானவரையும் குறித்த அடையாளம் ஆகும், இந்த அடையாளம் பெற்றதினால் தான், நாம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக பரலோகத்தின் தேவனை பிதா என்று அழைக்கும் புத்திரசுவீகாரம் பெற்றவர்களாகவும், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றவர்களாகவும் இருக்கிறோம், இது தேவனுடைய கிருபையே அன்றி வேறொன்றும் இல்லை - 30.யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார். 31.தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். 32.யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள் - லூக்கா 11:30-32
அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும்
இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களில், இது மிகவும் முக்கியமானதாக இருப்பதினால் தான், இந்த உபதேசம் மத்தேயுவின் சுவிஷேச புஸ்தகத்திலும் எழுதப்பட்டுள்ளது, மேலும், ஒரு வேளை யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தை மாத்திரம் பெற்று, அதாவது இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்ததை அறிந்தும், இயேசு கிறிஸ்து மாத்திரமே தேவன் என்று அறிக்கை செய்ய முடியாமலும், பரிசுத்த ஆவியானவரின் நிறைவை பெறாமலும் இருப்போமானால், அந்த நபர் வெறுமையான, பெருக்கி, ஜோடிக்கப்பட்ட வீட்டுக்கு சமமானவராக தான் இருப்பார், அவரின் முடிவு பரிதாபமே என்று இயேசு கிறிஸ்து சொன்னது, நாம் பரிசுத்த ஆவியானவரின் நிறைவை பெற வேண்டும் என்பதற்காகவும், நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மாத்திரமே - 22.Then one was brought to Him who was demon-possessed, blind and mute; and He healed him, so that the blind and mute man both spoke and saw. 23.And all the multitudes were amazed and said, “Could this be the Son of David?” 24.Now when the Pharisees heard it they said, “This fellow does not cast out demons except by Beelzebub, the ruler of the demons.” 25.But Jesus knew their thoughts, and said to them: “Every kingdom divided against itself is brought to desolation, and every city or house divided against itself will not stand. 26.If Satan casts out Satan, he is divided against himself. How then will his kingdom stand? 27.And if I cast out demons by Beelzebub, by whom do your sons cast them out? Therefore they shall be your judges. 28.But if I cast out demons by the Spirit of God, surely the kingdom of God has come upon you. 29.Or how can one enter a strong man’s house and plunder his goods, unless he first binds the strong man? And then he will plunder his house. 30.He who is not with Me is against Me, and he who does not gather with Me scatters abroad. 31.“Therefore I say to you, every sin and blasphemy will be forgiven men, but the blasphemy against the Spirit will not be forgiven men. 32.Anyone who speaks a word against the Son of Man, it will be forgiven him; but whoever speaks against the Holy Spirit, it will not be forgiven him, either in this age or in the age to come. 33.“Either make the tree good and its fruit good, or else make the tree bad and its fruit bad; for a tree is known by its fruit. 34.Brood of vipers! How can you, being evil, speak good things? For out of the abundance of the heart the mouth speaks. 35.A good man out of the good treasure of his heart brings forth good things, and an evil man out of the evil treasure brings forth evil things. 36.But I say to you that for every idle word men may speak, they will give account of it in the day of judgment. 37.For by your words you will be justified, and by your words you will be condemned.” 38.Then some of the scribes and Pharisees answered, saying, “Teacher, we want to see a sign from You.” 39.But He answered and said to them, “An evil and adulterous generation seeks after a sign, and no sign will be given to it except the sign of the prophet Jonah. 40.For as Jonah was three days and three nights in the belly of the great fish, so will the Son of Man be three days and three nights in the heart of the earth. 41.The men of Nineveh will rise up in the judgment with this generation and condemn it, because they repented at the preaching of Jonah; and indeed a greater than Jonah is here. 42.The queen of the South will rise up in the judgment with this generation and condemn it, for she came from the ends of the earth to hear the wisdom of Solomon; and indeed a greater than Solomon is here. 43.When an unclean spirit goes out of a man, he goes through dry places, seeking rest, and finds none. 44.Then he says, ‘I will return to my house from which I came.’ And when he comes, he finds it empty, swept, and put in order. 45.Then he goes and takes with him seven other spirits more wicked than himself, and they enter and dwell there; and the last state of that man is worse than the first. So shall it also be with this wicked generation - Matthew 12:22-45
விபசாரமும் பாவமுமுள்ள சந்ததி
ஒருவேளை, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அருளும் அந்த இரண்டு அடையாளங்களை பெறாமல் இருப்போமானால், அல்லது ஒருவேளை அதை மறுதலிப்போமானால், நாம் வேறு இரண்டு அடையாளங்களுக்கு சொந்தக்காரர்களாய் இருப்போம், அதுதான் "விபசாரமும் பாவமுமுள்ள சந்ததி" என்பதாகும் - For whoever is ashamed of Me and My words in this adulterous and sinful generation, of him the Son of Man also will be ashamed when He comes in the glory of His Father with the holy angels - Mark 8:38
சத்துரு அவர்களைத் தொடருவான்
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிyயாகிய ஓசியாவும் நாம் பரிசுத்த ஆவியானவரின் நிறைவை பெற வேண்டியதின் அவசியத்தை இவ்வாறாக கூறியுள்ளார், அதாவது இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்ததை அறிந்தும், இயேசு கிறிஸ்து மாத்திரமே தேவன் என்று அறிக்கை செய்ய முடியாமலும், பரிசுத்த ஆவியானவரின் நிறைவை பெறாமலும் இருப்பவர்களை, சத்துரு தொடருவான், அதாவது பொல்லாத அசுத்த ஆவிகள் குடியிருக்கும் நபராக அவர் இருப்பார் என்று அதன் ஆபத்தை கூறியுள்ளார் - 2.எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர் கூப்பிடுவார்கள். 3.ஆனாலும் இஸ்ரவேலர் நன்மையை வெறுத்தார்கள்; சத்துரு அவர்களைத் தொடருவான் - ஓசியா 8:2-3