அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு
அப்போஸ்தலர்களாக நியமிக்கப்பட்ட சீஷர்களுக்கு, இயேசு கிறிஸ்து தான் மெய்யான தேவன் என்கிற ஞானமும், அவரே சகலத்தையும் உண்டாக்கின சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதை அறிந்துக் கொள்வதற்கான சமயமும் இல்லாமல் இருந்தது, இதை தான் மார்க் சீஷர்கள் சாப்பிடுவதற்கும் நேரம் இல்லாமல் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார், அதாவது, இங்கு சாப்பாடு என்று சொல்லப்பட்டது, இவ்வுலக ஜீவியத்திற்கான ஆகாரத்தை குறிக்காமல், நம் நித்திய ஜீவியத்திற்கான ஆகாரமாகிய இயேசு கிறிஸ்து என்கிற ஜீவ அப்பத்தை குறிப்பதாகவே இருந்தது - 13.பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். 14.அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், 15.வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். 16.அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார். 17.செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார். 18.அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், 19.அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே. 20.பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள் - மாற்கு 3:13-20
போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது
அதனால் தான் பிசாசுகளைத் துரத்தி, எண்ணெய் பூசிச் நோயாளிகளை சொஸ்தமாக்கி தங்கள் முதல் ஊழியத்தை முடித்து வந்த சீஷர்கள், இயேசு கிறிஸ்துவிடம் வந்து, "நீர் செய்த" அற்புதங்கள் என்று நன்றி சொல்லாமல், "தாங்கள் செய்த அற்புதங்கள்" என்றும், "தாங்கள் செய்த உபதேசங்கள்" என்றும் சொன்னார்கள், அதனால் தான் அவர்களுக்கு கர்த்தர் பதில் ஒன்றுமே சொல்லாமல், வனாந்தரமான இடத்திற்கு போஜனம்பண்ண அழைத்து சென்றார். இளைப்பாறுவதும், போஜனம்பண்ணுவதும் நோக்கமாக இருந்திருந்தால், கர்த்தர் சீஷர்களை செழிப்பான இடத்திற்கோ, அல்லது ஒரு பட்டணத்திற்கு தானே அழைத்து சென்றிருக்க வேண்டும். இங்கு போஜனம் என்று சொல்லப்பட்டது நம் ஆவிக்குரிய போஜனத்தை, அதாவது இயேசு கிறிஸ்து தான் ஜீவ அப்பம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற இரட்சிப்பின் போஜனமாகவே இருந்தது, அதற்காகத் தான் கர்த்தர் சீஷர்களை வனாந்தரமான இடத்திற்கு அழைத்துச் சென்றார் - 30.அப்பொழுது அப்போஸ்தலர் இயேசுவினிடத்தில் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள் யாவையும் அவருக்கு அறிவித்தார்கள். 31.அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்; ஏனெனில், வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது - மாற்கு 6:30-31