You went forth before Your people
Translation in progress from www.parisurthar.com

சங்கீதகாரனாகிய தாவீது, "தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்" என்று சொல்லும் பொழுது, பரலோகத்தின் தேவன் பூமிக்கு வரப்போகிறார் என்கிற ரகசியத்தை தெரிவித்திருந்தார் - 4.தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள். 5.தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார். 6.தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள். 7.தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்,(சேலா.) 8.பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது - சங்கீதம் 68:4-8



அப்படி பரலோகத்தின் தேவன், இயேசு கிறிஸ்துவாக இந்த பூமிக்கு வந்த பொழுது, அவர் எங்கு சென்றாலும்  திரள்கூட்ட மக்கள் அவரை சூழ்ந்து கொள்வார்கள், ஆனால் கர்த்தர் நமக்காக இரத்தம் சிந்தி சிலுவையில் தன் ஜீவனை விட எருசலேம் நோக்கி சென்ற பயணத்தில் மாத்திரம் திரள்கூட்ட மக்கள் அவரை பின் தொடர இயேசு கிறிஸ்து முன்னே நடந்து சென்றார் - அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப் போகையில், திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள் - மத்தேயு 20:29 &  பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்து போனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள் - மாற்கு 10:32


இது கர்த்தர் நம்மீது வைத்த அன்பையும், நம்முடைய இரட்சிப்பிற்காக தானாக முன் வந்ததையும் வெளிப்படுத்துகிறது - இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்தி நடந்துபோனார் - லூக்கா 19:28


இதை தான் சங்கீதகாரனாகிய தாவீது தீர்க்கதரிசனமாக இப்படிச் சொல்லியிருந்தார் - 7.தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்,(சேலா.) 8.பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது - சங்கீதம் 68:7-8