In Your Name
Translation in progress from www.parisurthar.com

கர்த்தர் தான் தெரிந்துக்கொண்ட, தன் அன்பு சீஷர்களை பார்த்து "விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே" என்று சொல்ல காரணம் என்ன என்று பார்க்கும் பொழுது, பல காரணங்களில் ஓன்று, சீஷர்கள் மற்றவர்களின் ஊழியத்தை தடுக்கிறவர்களாக இருந்ததையும், அப்படி தடுக்க கூடாது என்று இயேசு கிறிஸ்து தன் சீஷர்களுக்கு சொல்லி கொடுத்ததையும் பார்த்தோம், ஆனால் அந்த சம்பவத்திலிருந்து சீஷர்கள் மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொண்டார்கள்.


சீஷர்களுக்கு ஆரம்ப நாட்களில், நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான் ஜெபிக்க வேண்டும் என்கிற ரகசியம் தெரியாது, இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்க்கு தான் பிசாசுகள் பயப்படும் என்கிற ரகசியமும் தெரியாது, இது ரகசியம் கருவில் சுமந்த மரியாளுக்கும் தெரியாது, ஞானஸ்நானம் கொடுத்த யோவானுக்கும் தெரியாது, முப்பது வயதுள்ளவராயிருந்த இயேசு கிறிஸ்து சொன்னாலும் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலை. அப்படிபட்ட சூழ்நிலையில் தான், சீஷர்கள் தங்கள் முதல் ஊழியத்தை முடித்திருந்தார்கள், கர்த்தரும் மணம் இறங்கி அவர்கள் ஊழியத்தில் பல அற்புதங்களை செய்தார் - அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார் - லூக்கா 9:10

ஆனால் இப்பொழுதோ இந்த பரம இரகசியத்தை கற்றுக் கொள்ள வேண்டிய தருணம், அந்த நேரத்தில் தான் சீஷர்கள் மேல் ஒரு புகார் கூறப்பட்டது - 17அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். 18அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன். அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 19அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 20அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். 21அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது; 22இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். 23இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். 24உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான், 25அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். 26அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான். 27இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான் - மாற்கு 9:17-27


அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்ட சீஷர்களுக்கு, இயேசு கிறிஸ்து அப்பொழுது தான் சீஷர்களுக்கு தன் நாமத்தை குறித்து, அதாவது "என் நாமத்தினாலே" என்று உபதேசிக்க ஆரம்பித்திருந்தார் -  28வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். 29அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார். 30பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அதை ஒருவரும் அறியாதிருக்கவேண்டுமென்று விரும்பினார். 31ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். 32அவர்களோ, அந்த வார்த்தையை அறிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள். 33அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார். 34அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள். 35அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி, 36ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு: 37இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார் - மாற்கு 9:28-37

அப்போஸ்தலர் என்று கர்த்தர் வேறு பிரித்தது, கர்த்தருக்கு முன்பாக அப்போஸ்தலர்களாக, அதாவது உண்மையுள்ள ஊழியகாரனாக இருப்பதற்கே அன்றி, மக்கள் முன்பாக பெருமையின் பட்டமாகவோ, அல்லது அடையாளமாகவோ இருப்பதற்க்கு அல்ல - 49அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான். 50அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார் - லூக்கா 9:49-50

ஆனால் இந்த பாடத்திற்க்குப் பின்பு, சீஷர்கள் எந்த ஒரு பட்டமும் இல்லாமல் கர்த்தரின் பிள்ளைகளாகவே திரும்பி வந்தார்களாம் - 17பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். 18அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். 19இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. 20ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். 21அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. 22சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார். 23பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். 24அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - லூக்கா 10:17-24

கர்த்தர் தான் தெரிந்துக்கொண்ட, தன் அன்பு சீஷர்களை பார்த்து "விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே" என்று சொல்ல காரணம் என்ன என்று பல தலைப்புகளில் பார்த்துக்  கொண்டிருக்கிறோம்,  வேதாகமத்தில் சொல்லப்பட்ட ஆதாரத்தின் படி, சீஷர்கள் இன்னும் பக்குவப்படாதவர்களாகத் தான் இருந்தார்கள்.


📌 அப்போஸ்தலர் என்கிற பெருமையுள்ளவர்களாக

📌 தங்களை தாங்களே மகிமைபடுத்துகிறவர்களாக 

📌 மற்றவர்களை தாழ்வாக நினைப்பவர்களாக 

📌 தங்களுக்குளேயே சண்டையிடுகிறவர்களாக 

📌 மற்றவர்களின் ஊழியங்களை தடுப்பவர்களாக

📌 சிறியோர் பெரியோர் என்று தராதரம் பார்க்கிறவர்களாக 

📌 மாமிசத்திற்கு இடம் கொடுப்பவர்களாக 

📌 ஜெபம் செய்யத்தவர்களாக 

📌 சுயபலத்தை நம்பினவர்களாய் 

📌 விசுவாசம் இல்லாதவர்களாய்


இப்படி இருந்த  சீஷர்கள் ஊழியத்தை முடித்து திரும்பி வந்த பொழுது, அவர்களிடம் கர்த்தர் கொடுக்கும் பரலோக சந்தோஷம் இல்லாமல் தான் இருந்தன - அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார் - லூக்கா 9:10

ஆனால் கர்த்தர் அவர்களுக்கு நல்ல போதகராக இருந்து வழிநடத்தி தம்முடைய ராஜ்யத்திற்கு ஏற்ற பிள்ளைகளாக மாற்றின பொழுது, அவர்களிடம் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் தெரிந்தது, அது என்ன வென்றால், சீஷர்களிடம் தேவன் தந்த சந்தோஷம் நிரம்பி இருந்தது - பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள் - லூக்கா 10:17 

கர்த்தர் தான் தெரிந்துக்கொண்ட, தன் அன்பு சீஷர்களை பார்த்து "விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே" என்று சொல்ல காரணம் என்ன என்று பல தலைப்புகளில் பார்த்துக்  கொண்டிருக்கிறோம்,  வேதாகமத்தில் சொல்லப்பட்ட ஆதாரத்தின் படி, சீஷர்கள் இன்னும் பக்குவப்படாதவர்களாகத் தான் இருந்தார்கள்.

📌 அப்போஸ்தலர் என்கிற பெருமையுள்ளவர்களாக

📌 தங்களை தாங்களே மகிமைபடுத்துகிறவர்களாக 

📌 மற்றவர்களை தாழ்வாக நினைப்பவர்களாக 

📌 தங்களுக்குளேயே சண்டையிடுகிறவர்களாக 

📌 மற்றவர்களின் ஊழியங்களை தடுப்பவர்களாக

📌 சிறியோர் பெரியோர் என்று தராதரம் பார்க்கிறவர்களாக 

📌 மாமிசத்திற்கு இடம் கொடுப்பவர்களாக 

📌 ஜெபம் செய்யத்தவர்களாக 

📌 சுயபலத்தை நம்பினவர்களாய் 

📌 விசுவாசம் இல்லாதவர்களாய்


ஆனால் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து பிணியாளிகளைக் குணமாக்கி திரும்பி வந்த சீஷர்களோ, ஊழியத்தை குறித்துச் சொல்லும் பொழுது, தாங்கள் செய்த காரியங்கள் என்று சொல்லி தங்களை தாங்களே மிகைப்படுத்தி பேசினார்களாம், அப்பொழுது கர்த்தர் அவர்களிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை, மாறாக அவர்களை வனாந்திரத்திற்கு அழைத்துச் சென்றார் - அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார் - லூக்கா 9:10

ஆரம்பத்தில் ஊழியத்தை முடித்து திரும்பிய சீஷர்களிடம் ஒரு வார்த்தையும் பேசாத கர்த்தர், இந்த முறை பதில் பேசினதை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 17.பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.18.அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். 19.இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும்  மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. 20.ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். 21.அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. 22.சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார். 23.பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். 24.அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - லூக்கா 10:17-24


ஊழியத்தின் ஆரம்பத்தில் வரங்களை கொடுத்த தேவன், இப்பொழுது பாதுகாப்பை கட்டளையிடுகிறவராகவும், நம் நாமங்களை பரலோகத்தில் எழுதி, பிள்ளைகள் என்றும் பாக்கியவான்கள் என்றும் அழைத்து களிகூருகிறவராக இருக்கிறதை பார்க்கிறோம்.

கர்த்தர் தான் தெரிந்துக்கொண்ட, தன் அன்பு சீஷர்களை பார்த்து "விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே" என்று சொல்ல காரணம் என்ன என்று பல தலைப்புகளில் பார்த்துக்  கொண்டிருக்கிறோம்,  வேதாகமத்தில் சொல்லப்பட்ட ஆதாரத்தின் படி, சீஷர்கள் இன்னும் பக்குவப்படாதவர்களாகத் தான் இருந்தார்கள்.


📌 அப்போஸ்தலர் என்கிற பெருமையுள்ளவர்களாக

📌 தங்களை தாங்களே மகிமைபடுத்துகிறவர்களாக 

📌 மற்றவர்களை தாழ்வாக நினைப்பவர்களாக 

📌 தங்களுக்குளேயே சண்டையிடுகிறவர்களாக 

📌 மற்றவர்களின் ஊழியங்களை தடுப்பவர்களாக

📌 சிறியோர் பெரியோர் என்று தராதரம் பார்க்கிறவர்களாக 

📌 மாமிசத்திற்கு இடம் கொடுப்பவர்களாக 

📌 ஜெபம் செய்யத்தவர்களாக 

📌 சுயபலத்தை நம்பினவர்களாய் 

📌 விசுவாசம் இல்லாதவர்களாய்

ஆனால் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து பிணியாளிகளைக் குணமாக்கி திரும்பி வந்த சீஷர்களோ, ஊழியத்தை குறித்துச் சொல்லும் பொழுது, தாங்கள் செய்த காரியங்கள் என்று சொல்லி தங்களை தாங்களே மிகைப்படுத்தி பேசினார்களாம், அப்பொழுது கர்த்தர் அவர்களிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை, மாறாக அவர்களை வனாந்திரத்திற்கு அழைத்துச் சென்றார் - அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார் - லூக்கா 9:10

ஆரம்பத்தில் ஊழியத்தை முடித்து தங்களை குறித்து பெருமை பாராட்டிக்கொண்டிருந்த சீஷர்கள், இப்பொழுதோ கர்த்தர் தான் எல்லா அற்புதங்களும் காரணம் என்று, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்று அறிக்கை செய்தார்கள், அப்படி துதி கனம் மகிமையெல்லாம் இயேசுவுக்கு உரித்தாக்கும் பொழுது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் தான் "ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது" என்பதாகும்   - 17.பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.18.அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். 19.இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும்  மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. 20.ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். 21.அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. 22.சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார். 23.பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். 24.அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - லூக்கா 10:17-24


இப்படி ஊழியக்காரர்களாகிய நமது பாதுகாப்பு நம் கர்த்தரிடத்தில் தான் இருக்கிறது, அந்த வாக்குத்தத்தம் துதி கனம் மகிமையெல்லாம் இயேசுவுக்கு உரித்தாக்கும் பொழுது நமக்கு கிடைக்கிறது.

கர்த்தர் தான் தெரிந்துக்கொண்ட, தன் அன்பு சீஷர்களை பார்த்து "விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே" என்று சொல்ல காரணம் என்ன என்று பல தலைப்புகளில் பார்த்துக்  கொண்டிருக்கிறோம்,  இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னோரு காரியம் என்னவென்றால், ஆரம்பத்தில் கர்த்தர் தம்முடைய பன்னிரண்டு சீஷரை மாத்திரம் தான் ஊழியத்திற்கு அனுப்பினார் - 1.அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2.தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். 3.அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம். 4.எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள். 5.உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார். 6.அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள் - லூக்கா 9:1-6

காரணம், வேதாகமத்தில் சொல்லப்பட்ட ஆதாரத்தின் படி, சீஷர்கள் இன்னும் மற்றவர்களோடு இணைந்து பணிசெய்யும் பக்குவப்படாதவர்களாகத் தான் இருந்தார்கள்.


📌 அப்போஸ்தலர் என்கிற பெருமையுள்ளவர்களாக

📌 தங்களை தாங்களே மகிமைபடுத்துகிறவர்களாக 

📌 மற்றவர்களை தாழ்வாக நினைப்பவர்களாக 

📌 தங்களுக்குளேயே சண்டையிடுகிறவர்களாக 

📌 மற்றவர்களின் ஊழியங்களை தடுப்பவர்களாக

📌 சிறியோர் பெரியோர் என்று தராதரம் பார்க்கிறவர்களாக 

📌 மாமிசத்திற்கு இடம் கொடுப்பவர்களாக 

📌 ஜெபம் செய்யத்தவர்களாக 

📌 சுயபலத்தை நம்பினவர்களாய் 

📌 விசுவாசம் இல்லாதவர்களாய்

ஆனால் எல்லா பாடங்களுக்கும் பிறகு, கர்த்தர் தம்முடைய பன்னிரண்டு சீஷரைகளுடன் மற்றவர்களையும் சேர்த்து, மொத்தம் எழுபதுபேரை ஊழியத்திற்கு அனுப்பினார், கர்த்தரிடம் பாடம் கற்ற சீடர்களும் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றி ஊழியத்தை நிறைவேற்றி முடித்தார்கள் - 1.இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார். 2.அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். 3.புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். 4.பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம். 5.ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். 6.சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும். 7.அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள். 8.ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து, 9.அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். 10.யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்: 11.எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள். 12.அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 13.கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள். 14.நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும். 15.வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, 16.சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார் - லூக்கா 10:1-17


இப்படி வேதாகமத்தில் சொல்லப்பட்ட காரியங்களை புரிந்து, தேவ ஆவியானவரால் நடத்தப்பட்டால் தான் மற்றவர்களோடு இணைந்து கர்த்தருக்கு பணியாற்ற முடியும்.