When Jesus saw that a crowd came running together
Translation in progress from www.parisurthar.com

அசுத்த ஆவினால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனை சீஷர்கள் குணமாக்க முடியாமல் போன சமயத்தில், அங்கு வந்த நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அந்த இளைஞனின் தகப்பனுடைய வேண்டுதலின்படியே அந்த இளைஞனை குணமாக்கினதை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 37.மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள். 38.அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான். 39.ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான். அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது. 40.அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 41.இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். 42.அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார் - லூக்கா 9:37-42

 

மாற்கு இந்த சம்பவத்தைக் குறித்துச் சொல்லும் பொழுது, ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு அந்த இளைஞனை குணமாக்கினார் என்று எழுதியுள்ளார், இந்த உலகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு விசேஷமான காரியத்தை செய்வார்களேயானால், அது ஒரு திறப்பு விழாவாக இருக்கலாம், அல்லது ஒரு நன்கொடை கொடுக்கும் காரியமாக இருக்கலாம், அவர்கள் கூட்டம் கூடும் வரை காத்திருந்து அதற்கு பின்பு தான் எல்லோரும் காண அந்த காரியத்தை செய்வார்கள், ஆனால் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூட்டம் கூடுவதற்கு முன்பே அந்த இளைஞனை குணப்படுத்தி தான் பெருமைக்கு எதிர்த்து நிற்கிற தெய்வம் என்பதை நிரூபித்தார் - 17.அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். 18.அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன். அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 19.அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 20.அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். 21.அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது; 22.இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். 23.இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். 24.உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான், 25.அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். 26.அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான். 27.இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான் - மாற்கு 9:17-27



ஒருவேளை மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு காரியத்தை நாம் செய்வோமானால் நம் இருதயம் அதனைக் குறித்து மனமேட்டிமை அடையத்தான் செய்யும், நாம் செய்த அந்த காரியம் இன்னும் பல பேருக்கு தெரிய வேண்டும் என்று விரும்புகிறவர்களாகத்தான் இருப்போம், ஆனால் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் யாராலும் செய்ய முடியாத அற்புதத்தை செய்யப் போகிறோம் என்று அறிந்தும், கூட்டம் கூடுகிறதுக்கு முன்பே அந்த அற்புதத்தை செய்து, தான் பெருமைக்கு எதிர்த்து நிற்கிற தெய்வம் என்பதை நிரூபித்தார், அதைத்தான் மார்க் தன்னுடைய சுவிசேஷ புத்தகத்தில் "ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு" என்று எளிதியுள்ளார்.