நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்க வேண்டியது அவசியம் என்கிற இரகசியத்தை இயேசு கிறிஸ்து நிக்கொதேமுவிடம் சொன்ன பொழுது, "காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்" என்கிற ஒரு காரியத்தையும் சொன்னார் - 5.இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். 6.மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். 7.நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். 8.காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். 9.அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். 10.இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?. 11.மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுகொள்ளுவதில்லை. 12.பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? 13.பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. 14.சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், 15.தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். 16.தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் - யோவான் 3:5-16
யார் அந்த காற்று?
இந்த வசனத்தில் கர்த்தர் யாரை காற்றோடு ஒப்பிடுகிறார் என்று பார்த்தால், அது தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே குறிப்பதாய் இருக்கிறது, ஏனென்றால் அக்காலத்தில் ஒருவர் கூட இயேசு கிறிஸ்து, பிதாவிடம் இருந்து வந்தவர் என்றும், மறுபடியும் பிதாவிடம் செல்கிறவர் என்பதை அறியாமல் இருந்தார்கள் - இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள் - யோவான் 8:14
இப்படி நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிதாவிடம் இருந்து வருகிறவர், என்பதை உணர்த்த தான், இந்த பழைய ஏற்பாட்டு காரியங்கள் எழுதப்பட்டன - அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து(பிதாவிடம்) புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது - எண்ணாகமம் 11:31
இதை தான் சங்கீதகாரனும் தீர்க்கதரிசனமாக கூறினார், எப்படியெனில், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, பிதாவிடமிருந்து புறப்பட்ட காற்றாகவும், அதே சமயத்தில் மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்ட சர்ப்பத்தை போல அக்கினிஜுவாலைகளாகவும் இருப்பார் என்று தீர்க்கதரிசனமாக கூறினார் - 1.என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர். 2.ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். 3.தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். 4.தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் - சங்கீதம் 104:1-4
இப்படி இயேசு கிறிஸ்து சொன்ன உவமையில், காற்றானது எப்படி கர்த்தரை குறிக்கிறதோ, அது போல அவரே ஆவியினால் பிறந்த முதற்பேரானவராகவும், நம்மையும் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்க செய்கிறவராகவும் இருக்கிறார் - இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது - மத்தேயு 1:18