Are there not twelve hours in the day?

Translation in progress from www.parisurthar.com

When disciples tried to stop Jesus from going to Lazarus village, He asked this question - "Are there not twelve hours in the day?"

 Then after this he said to the disciples, Let us go to Judea again. The disciples said to him, Rabbi, the Jews were just now seeking to stone you, and are you going there again? Jesus answered, Are there not twelve hours in the day? If anyone walks in the day, he does not stumble, because he sees the light of this world. But if anyone walks in the night, he stumbles, because the light is not in him - John 11:7-10

And in the previous chapter of John confirmed that Christ was beyond the Jordan river when he spoke this words - Again they sought to arrest him, but he escaped from their hands. He went away again across the Jordan to the place where John had been baptizing at first, and there he remained - John 10:39-40

So walking from beyond the Jordan area to Bethany may take 12 hours also.

But the parable "Are there not twelve hours in the day?" also tells exactly which day Christ asked this question.

And only few days in Israel, the day length is exactly 12 hours, that is just before the Passover day, even today sometime in march the day hours is 12 hours - Now the Passover of the Jews was at hand, and many went up from the country to Jerusalem before the Passover to purify themselves - John 11:55

So the one who created day and night knew the length of the day and said - "Are there not twelve hours in the day?"

Trust Jesus Christ, He is coming again.

இஸ்ரவேல் தேசத்தில், வெயில் காலத்தில் அதிக பட்சமாக ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வெளிச்சம் இருக்கும், அதே போல் குளிர் காலத்தில் குறைந்த பட்சமாக 10  மணி நேரம் தான் வெளிச்சம் இருக்கும், ஆனால் வருடத்தில் ஒரே ஒரு நாள் தான் சரியாக 12 மணி நேரம் வெளிச்சம் இருக்கும், அதனால் இயேசு கிறிஸ்து "பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா?" என்ற கேட்ட கேள்வியில் இருந்து கர்த்தர் லாசருவை உயிரோடு எழுப்பின நாளை கணக்கிட முடியும். அது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பஸ்காபண்டிகைக்கு முந்தின மாதமான மார்ச் மாதத்தின் மத்தியில் வருகிறது.

இப்படி லாசருவை உயிரோடு எழுப்புவதற்கு முன்பு, கர்த்தர் எருசலேமில் இருந்த சமயத்தில், யூதர்கள் அவரை குறித்து பேசின பேச்சு நிச்சியமாவே ஏற்று கொள்ள முடியாத ஒன்று தான் - 20.அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள் - யோவான் 10:20


ஆனால் இயேசுவோ அதற்கு பதில் ஒன்றும் சொல்லாமல் தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே இருக்கும் பொழுது, யூதர்கள் அவர்களாகவே வந்து இயேசுவிடம் நீர் கிறிஸ்துவா என்று கேள்வி எழுப்பினார்கள் - 21.வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள். 22.பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது. 23.இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். 24.அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள் - யோவான் 10:24


அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன இயேசுவை கல்லெறிய பார்த்தார்கள் - 25.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. 26.ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். 27.என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. 28.நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. 29.அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. 30.நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். 31.அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். 32.இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். 33.யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள் - யோவான் 10:25-33

ஆனால் இயேசுவோ மறுபடியும் வேதவசனங்களை மேற்கோள் காட்டி, தேவனை பிதா என்றும், தன்னுடைய கிரியைகளின் நிமித்தமாவது தான் யாராக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா என்று சொன்னதை பார்க்கலாம் - 34.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? 35.தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, 36.பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? 37.என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. 38.செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார் - யோவான் 10:34-38