You would not have condemned the guiltless

Translation in progress from www.parisurthar.com

ஒருமுறை பரிசேயர் இயேசு கிறிஸ்துவிடம், "ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே" என்று கேட்டதின் நோக்கம், சீஷர்களிடம் அல்ல, மாறாக இயேசு கிறிஸ்துவின் மேல் குறைகண்டு பிடிப்பதே அவர்களின் நோக்கமாய் இருந்தது, அப்பொழுது கர்த்தர் சொன்ன பதிலில் குற்றமில்லாதவர்கள் என்று யாரை குறிப்பிட்டார்? -  1.அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள். 2.பரிசேயர் அதைக் கண்டு, அவரை நோக்கி: இதோ ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள். 3.அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? 4.அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே. 5.அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா? 6.தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 7.பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். 8.மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார் - மத்தேயு 12:1-8


இயேசு கிறிஸ்து பரிசேயர்களுக்கு பதிலளிக்கும் பொழுது, குற்றமில்லாதவர்கள் என்று சொன்னது கர்த்தரையே குறிக்கிறது, அவரையே குற்றமற்றவர் என்று வேதாகமம் சொல்லுகிறது - 26.பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார். 27.அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார் - எபிரெயர் 7:26-27


அதே சமயத்தில், அந்த குற்றமற்றவரை நம் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அந்த குற்றமற்ற கதிரை புசிக்கும் பொழுது, அவர் சிந்தின பரிசுத்த இரத்தம் நம்மையும் குற்றமில்லாதவர்களாக மாற்றுகிறது என்பதில் சந்தேகம் இல்லை -  1.அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள் - மத்தேயு 12:1-2