What are you arguing about with them?
Translation in progress from www.parisurthar.com

சீஷர்கள் ஊமையான ஆவியை துரத்த கூடாமல் போனபோது, வேதபாரகர்கள் வந்து சீஷர்களோடு தர்க்கித்தார்களாம், அதாவது சண்டை போட்டார்களாம், அதை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 14.பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார். 15.ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள் - மாற்கு 9:14-15


சீஷர்களால் ஊமையான ஆவியை துரத்த முடியாமல் போனது உண்மைதான், அது அவர்களுடைய ஊழியத்தில் ஏற்பட்ட ஒரு தடுமாற்றமாக தான் இருந்தது, ஆனால் வேதபாரகர் ஏன் சீஷர்களோடு தர்க்கிக்க வேண்டும்?


இது சீஷர்களின் ஊழியத்தையும் சுகமளிக்கும் வல்லமையையும் கண்டதினாலுண்டான பொறாமையாக இருக்கலாம், ஒருவேளை, சீஷர்கள் மூலமாக கர்த்தர் செய்த மேலான காரியங்களை செய்த பொழுது,  சீஷர்கள் வேதபாரகர்களை குறித்து தாழ்வாக பேசியிருக்கலாம், எதுவாக இருந்தாலும், கர்த்தரே நமக்காக பேசுகிறவராய் இருக்கிறார் என்பதைத்தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம், இதுதான் சீஷர்களுடைய வாழ்க்கையிலும் நடந்தது, நாமும் கர்த்தருக்கே காத்திருப்போம், அவரே நம் சகாயர் - 16.அவர் வேதபாரகரை நோக்கி: நீங்கள் இவர்களோடே என்னத்தைக்குறித்து தர்க்கம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார். 17.அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். 18.அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன். அவர்களால் கூடாமற்போயிற்று என்றான் - மாற்கு 9:16-18