Except by prayer and fasting
Translation in progress from www.parisurthar.com

கர்த்தர் சொன்ன பதிலில், "இந்த ஜாதிப் பிசாசு" என்கிற ஒரு காரியம் மிகவும் கூர்ந்து கவனிக்கபட வேண்டியதாய் இருக்கிறது - 19அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள். 20அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 21இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார் - மத்தேயு 17:19-21


காரணம் இயேசு கிறிஸ்து தன் சீஷர்களுக்கு வரங்களையும் கிருபைகளையும் கொடுக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட வகை பிசாசுகளின் மீது அதிகாரம் கொடுக்காமல், சகல பிசாசுகளின் மீதும் அதிகாரத்தை கொடுத்திருந்தார் - 1அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார் - லூக்கா 9:1-2.


அப்படியென்றால்  இயேசு கிறிஸ்து "இந்த ஜாதிப் பிசாசு" என்று சொன்னது, நமக்குள் இருக்கிற தேவனை துக்கப்படுத்துகிற காரியங்களை குறித்ததே ஆகும், உபவாசிப்போம், ஜெபிப்போம் மாம்சத்தை மேற்கொள்வோம்.