I am poured out like water
Translation in progress from www.parisurthar.com

சங்கீதகாரனாகிய தாவீது, இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை குறித்துச் சொல்லும் பொழுது "தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்" என்று சொன்னதின் அர்த்தம் தான் என்ன? - 14.தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. 15.என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர். 16.நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள் - சங்கீதம் 22:14-16


பழைய ஏற்பாட்டின் நாட்களில் "தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும்" என்றாலே பலியின் இரத்ததை குறிக்கிறதாய் இருந்தது -  21.உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானம் உனக்குத் தூரமானால், கர்த்தர் உனக்கு அளித்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நான் உனக்கு விதித்தபடி நீ அடித்து, உன் இஷ்டப்படி உன் வாசல்களிலே புசிக்கலாம். 22.வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல நீ அதைப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம். 23.இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம். 24.அதை நீ சாப்பிடாமல் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும் - உபாகமம் 12:21-24


இப்படி சங்கீதகாரனாகிய தாவீதின் மூலமாய் கர்த்தர் "தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்" என்று சொன்னது நம்மை இரட்சிக்க இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தப் போகிற இரத்ததை குறித்த தீர்க்கதரிசனமாகவே இருந்தது,  இந்த தீர்க்கதரிசன வசனங்கயெல்லாம் நிறைவேற்றின பிறகு இயேசு கிறிஸ்து தாமே இதை சீஷர்களிடம் விளக்கி காண்பித்தார் என்பதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் -  44.அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். 45.அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: 46.எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது - லூக்கா 24:44-46