He was oppressed and He was afflicted
Translation in progress from www.parisurthar.com
எசாயா தீர்க்கதரிசி இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்லம் பொழுது "அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார்" என்று தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார் - அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார் - ஏசாயா 53:7
சங்கீதகாரனாகிய தாவீது இதை குறித்து சொல்லும் பொழுது, சிலுவையின் பாடுகளின் போது மாத்திரம் அல்ல, இயேசு கிறிஸ்து தன் சிறுவயது முதற்கொண்டே நெருக்கப்பட்டும், சத்ருவினால் அவரை மேற்கொள்ள முடியவில்லை என்று சொல்லியிருக்கிறார் - 1.என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள். 2.என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். 3.உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள் - சங்கீதம் 129:1-3
இப்படி பலவிதமான நெருக்கத்தின் மத்தியில் வாழ்ந்து தான் கர்த்தர் நம்மை ரட்சித்தார் - 49.பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன். 50.ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன் - லூக்கா 12:49-50
He was oppressed => Son
He was afflicted => Father