யூதாஸ்காரியோத் புறப்பட்டுப்போனபின்பு
இயேசு கிறிஸ்து தான் சிலுவைக்கு போகும் முன்பு, தன்னுடைய சீஷர்களுக்கு பிரத்தியட்சமாக செய்த உபதேசம், ஒரு நீண்ட போதனையாக யோவான் 13, 14, 15, 16, 17ம் அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளது, இது கர்த்தர் தன்னுயுடைய சீஷர்களில் ஒருவனான யூதாஸ்காரியோத் தன்னை விட்டு போகும் வரை காத்திருந்து, அவன் போனபின்பே போதித்தார் - 21.இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார். 22.அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள். 23.அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். 24.யாரைக்குறித்துச் சொல்லுகிறாறென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். 25.அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். 26.இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். 27.அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார். 28.அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை. 29.யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். 30.அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது. 31.அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார் - யோவான் 13:21-31
இப்படி தன்னை காட்டி கொடுக்கும் யூதாஸ்காரியோத் போகும் வரை காத்திருந்து, அவன் போன பின்பு பரலோக ரகசியங்களை குறித்து தன் சீஷர்களுக்கு போதித்தற்கு காரணம் யூதாஸ்காரியோத்தின் நம்பிக்கை துரோகமே.
யோவானுடைய தூதர்கள் போனபின்பு
எப்படி தன்னை காட்டி கொடுக்கும் யூதாஸ்காரியோத் போகும் வரை காத்திருந்து, அவன் போன பின்பு பரலோக ரகசியங்களை குறித்து தன் சீஷர்களுக்கு போதித்தாரோ, அதைப் போலவே, இங்கு யோவானுடைய தூதர்கள் போகும் வரை காத்திருந்து, கர்த்தர் ஜனங்களிடம் பேசினதற்கு காரணம் என்ன? - 10.மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள். 12.அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள். 13.கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, 14.கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 15.மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். 16.எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். 17.இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று. 18.இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து, 19.நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். 20.அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள். 21.அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார். 22.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. 23.என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். 24.யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? 25.அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள். 26.அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 27.இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான் - லூக்கா 7:10-27
முதலாவது, யோவானுடைய தூதர்கள் போன பின்பு கர்த்தர் எதை ஜனங்களுக்கு சொல்லி கொடுத்தார் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும், அது வனாந்தரத்திலிருந்து வரப்போகிற யேகோவா தேவனாகிய தன்னை குறித்த தீர்க்கதரிசனங்களே ஆகும்.
அதை ஏன் யோவானுடைய தூதர்கள் போகும் வரை காத்திருந்து பின்பு சொன்னார்? ஏனென்றால், இந்த உலக மனிதர்களை தங்களின் குருவாக, ராஜாவாக வைத்துக் கொள்வர்கள் கர்த்தரின் பார்வையில் யூதாஸ்காரியோத்துகளாகவே இருக்கிறார்கள்.
உலக மனிதர்களை தங்களின் குருவாக வைத்துக் கொள்வர்களே, கர்த்தரின் பார்வையில் யூதாஸ்காரியோத்துகளாக இருப்பார்களானால், மற்றவர்களுக்கு குருவாக இருக்க நினைப்பது எவ்வளவு ஆபத்தானது, அதைத்தான் இந்த யோவானின் வாழ்க்கையும் நமக்கு பாடமாக சொல்லுகிறது.
வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார்
மேலும் இந்த யோவான் மரித்த பின்பும் கர்த்தர் வனாந்தரத்திற்கு சென்று தன்னைக் குறித்த தீர்க்கதரிசனங்களை நினைவு கூற செய்தார், இதில் வனாந்தரம் என்பது இயேசு கிறிஸ்து கடந்துச் சென்ற கஷ்டமான பாதைகளையும், சிலுவையின் மரணத்தையும் குறித்த தீர்க்கதரிசனமாகவும் இருக்கிறது, அதனால் யோவானுடைய சீஷர்களுக்கு அதற்கு பலி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கும், ஆனால் யூதர்களை மாத்திரமில்லாமல், முழு உலகத்தையும் இரட்சிக்க வந்த கர்த்தர், தான் இந்த பூமிக்கு வந்த நோக்கத்தை விளக்க வனாந்தரமான இடத்துக்குச் சென்றார் - 1.அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, 2.தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 3.ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி காவலில் வைத்திருந்தான். 4.ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். 5.ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். 6.அப்படியிருக்க, ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். 7.அதினிமித்தம் அவன்: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். 8.அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள். 9.ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக் கட்டளையிட்டு, 10.ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான். 11.அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள். 12.அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள். 13.இயேசு அதைக் கேட்டு அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள். 14.இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார் - மத்தேயு 14:1-14
குருவாய் இருந்த யோவான்
பின் சொல்லப்பட்ட வசனங்களிலிருந்து, யோவான் ஒரு குருவைப் போல இருந்ததையும், அவருக்கு பல சீஷர்கள் இருந்ததையும் அறிந்து கொள்ளலாம், இது கர்த்தருக்கு விரோதமான காரியம்தான், ஏனென்றால் இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களுக்கு கொடுத்த கட்டளைகளில் ஒன்று நீங்கள் குரு என்று அழைக்கப்படாதிருங்கள் என்பதாகும், மேலும் இந்த யோவானுடைய சீஷர்களை கிறிஸ்துவுக்கு எதிராய் செயல்பட்ட பரிசேயருடைய சீஷர்களுக்கு ஒப்பாகவே வேதாகமம் பார்க்கிறது - 18.யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம் பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருப்பதென்னவென்று கேட்டார்கள். 19.அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. 20.மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள். 21.ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். 22.ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம்; துருத்திகளும் கெட்டுப்போம்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார் - மாற்கு 2:18-22
தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால்
கர்த்தருக்கு ஞானஸ்நானம் கொடுத்த பின்பு, பரமதேவனாகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்றாமல், பல சீஷர்களை வைத்துக்கொண்டு யோவான் கொடுத்த வந்த ஞானஸ்நானம், சாலேமின் ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவினாலுண்டாகும் பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலின் படி இல்லாமல், சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால் கொடுத்த ஞானஸ்நானமாகவே இருந்தது, அதினால் ஒரு பிரயோஜனமும் இல்லையே - சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்:: ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள் - யோவான் 3:23